பக்கம்:என் ஆசிரியப்பிரான்.pdf/33

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பழைய மரபு 2?

அவரைச் சந்தித்து, நீங்கள் வாங்கின விலையைவிட நான் அதிக மாகக் கொடுக்கிறேன். அந்த மேசையை எனக்குக் கொடுத்து விடுங்கள்’’ என்று கேட்டார்.

'அது எப்படி? நான் எனக்கு வேண்டுமென்றுதானே அதை வாங்கி வந்திருக்கிறேன்? அதை விட்டுவிட எனக்கு மனமில்லை’ என்று சொல்லிவிட்டார் இராமசாமிநாயுடு. ஆசிரியருக்கு மிகவும் வருத்தமுண்டாயிற்று. ஆயினும் மனம் தளரவில்லை. அடுத் தடுத்துப் பல நாட்கள் அவருடைய வீட்டிற்குச் சென்று கேட்டு வந்தார்.

'நீங்கள் மேசை வேண்டும் என்றுதான் வாங்கி வந்தீர்கள். இதுவோ பழைய மேசை. நீங்கள் புதியதாகவே ஒரு மேசையை வாங்கிக்கொள்ளலாம், எனக்கோ இது குண்டும் குழியுமாக இருக்கிற பழைய மேசையாகத் தோன்றவில்லை. தியாகராச செட்டியாரின் கைபட்ட புனிதமான பூஜைப் பொருளாகத் தோன்றுகிறது. என்ன விலை சொன்னலும் நான் தருகிறேன். தயைசெய்து அதை எனக்கு அளிக்க வேண்டும்' என்று கெஞ்சாக் குறையாகக் கேட்டார்.

இராமசாமி நாயுடு மனம் இரங்கி அந்த மேசையைக் கொடுப் பதாகத் தோன்றவில்லை. ஆசிரியர் அவர்மேல் ஒரு செய்யுளே இயற்றித் தம் விருப்பத்தைத் தெரிவித்துக் கொண்டார். வாய்ப் பேச்சுக்கு இரங்காத அவர், தம்மேல் பாடப் பெற்ற தமிழ்ச் செய்யுளேக் கேட்டவுடன், மனம் இரங்கி அந்த மேசையை ஆசிரியருக்கு விற்றுவிட முன்வந்தார். அந்த மேசையை வாங்கிக் கொண்டு வந்து தம் வீட்டில் போட்டபிறகுதான் ஆசிரியப் பிரானுக்கு ஏதோ ஒரு புதிய ராஜ்யத்தைப் பிடித்தது போன்ற மகிழ்ச்சி ஏற்பட்டது.

இராமலிங்கத் தம்பிரான்

சிதம்பரம் ஈசான மடத்தில் இராமலிங்கத் தம்பிரான் என்ற சைவத் துறவி ஒருவர் இருந்தார். அவர் பல நூல்களைப் படித்து ஆராய்ந்திருந்தார். குமரகுருபரருடைய பிரபந்தத் திரட்டையும், சிவப்பிரகாசருடைய பிரபந்தத் திரட்டையும் வெளியிட வேண்டு மென்ற ஆசை அவருக்கு இருந்தது. அவருக்குக் கிடைத்த ஏடுகள் அவருக்குத் திருப்தி அளிக்கவில்லை. சிறந்த ஏடுகள் ஆசிரியப் பெருமானிடம் இருக்கக்கூடும் என நினைத்தார். பல சமயங்களில் ஆசிரியரிடமிருந்து உதவி பெற்றிருந்ததல்ை அதுபற்றித் தம் கருத்தை ஆசிரியருக்கு எழுதினர். அப்படியே ஆசிரியரும் அவற்றை அனுப்பினர். -