பக்கம்:என் ஆசிரியப்பிரான்.pdf/34

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22 என் ஆசிரியப்பிரான்

குமரகுருபரர் பிரபந்தங்கள்

பிற்காலத்தில் திருப்பனந்தாளில் எழுந்தருளியிருந்த சாமிநாதத் தம்பிரான் சுவாமிகளின் விருப்பப்படி மிகச் சிறப்பான முறையில் ஆசிரியப்பிரானே குமரகுருபரருடைய பிரபந்தங்களைப் பதிப்பித்திருக்கிருர். எல்லா நூல்களையும் திருத்தமான முறையில் பதிப்பிக்க வேண்டுமென்ற ஆர்வம் அவருக்கு இருந்தது. ஆலுைம் மனிதன் எல்லைக்குள் அடங்கிய சக்தியை உடையவன்தானே? ஆகையால் யாராவது ஏதாவது ஏட்டுச்சுவடி கேட்டால், தாம் ஆராய்ந்து கொண்டிருக்கிற நூல் அல்லாமல் இருந்தால் அவர் களுக்குத் தம்மிடம் இருந்த ஏடுகளைக் கொடுத்தும், வேண்டிய ஆலோசனைகளைக் கூறியும் உதவி புரிந்து வந்தார்.

விழாக்களில் தலைமை

இடையிடையே தம்முடைய ஆராய்ச்சியினல் உண்டாகிற சிரமத்தைத் திர்த்துக் கொள்ள வெளி ஊர்களுக்குப் போவது உண்டு. ஆங்காங்குள்ள தமிழ்ச் சங்கங்களில் ஆண்டுவிழா நடக்கும் போது தலைமை தாங்க ஆசிரியப் பெருமானை அழைப்பார்கள். அப்படித் தலைமை தாங்கப் போகும் இடங்களில் எல்லாம் புலவர் களோடு அளவளாவிப் பேசி எல்லோருக்கும் மகிழ்ச்சி உண்டாகும் படி செய்வார். ஆசிரியப் பெருமானுடைய பேச்சில் பலவகையான வரலாறுகள், செய்திகள், அநுபவக் கருத்துக்கள் நிரம்பியிருக்கும். பல காலம் படித்தும், ஆராய்ந்தும் உணர்ந்துகொள்ள முடியாத பொருள் நுட்பங்களை அவரிடம் சிறிது நேரம் பேசிக்கொண்டிருந் தாலே உணர்ந்து கொள்ள முடியும்.

அவர் தலைமை தாங்கச் சில இடங்களுக்குப் போகிற போது, வேறு இடங்களில் உள்ளவர்கள் அடிக்கடி அவரைத் தம்முடைய சங்க ஆண்டுவிழாவுக்கும் வரவேண்டுமென்று அழைப்பார்கள். கூப்பிட்ட இடங்களுக்கெல்லாம் போய்க் கொண்டிருந்தால் தம் ஆராய்ச்சி வேலை தடைப்படும் என்பதை உணர்ந்து ஆசிரியப் பெருமான் எல்லா இடங்களுக்கும் போவதில்லை; என்ருலும் ஆராய்ச்சியால் உண்டாகும் அலுப்பைக் போக்கிக்கொள்ள எப்போதாவது சில இடங்களுக்குப் போய் வருவார். வேறு சில சமயங்களில் சிவஸ்தலங்களுக்குப் போய்ச் சுவாமி தரிசனம் பண்ணி வருவார்.

தல தரிசனம் என்பது அவருக்கு மிகவும் விருப்பமான செயல். தலங்களைப் பற்றிய செய்திகளைச் சேகரிப்பதில் பேரார்வம் உடைய