பக்கம்:என் ஆசிரியப்பிரான்.pdf/35

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பழைய மரபு 23

வராக இருந்தார். ஏதேனும் தலத்திற்குச் சென்ருல் அந்தத் தலத்தைப்பற்றிய வரலாறு, வடமொழி, தென்மொழியில் வழங்கு கின்ற அந்தத் தலத்திலுள்ள பெருமான் பெயர், அம்பிகை பெயர், அந்தத் தல சம்பந்தமான நூல்கள் முதலியவற்றைப் பல பேரிடம் விசாரித்துத் தெரிந்து கொள்வார். அவற்றை எல்லாம் குறிப்புக் களாக எழுதி வைப்பார். இவ்வாறு சேகரித்த குறிப்புக்கள் மிக அதிகமாக இருக்கின்றன. தேவாரத்தைச் சமயம் கிடைக்கும் போது அச்சிடவேண்டுமென்ற ஆசை ஆசிரியப் பெருமானுக்கு இருந்தது. தேவாரத்தில் வரும் சொற்பொருள்களைத் தொகுத்து இரண்டு அகராதிகளே எழுதி வைத்துக் கொண்டார். தலங்களின் சம்பந்தமான செய்திகளே அப்போது பயன்படுத்திக் கொள்ளலாம் என்று எண்ணினர். அது மட்டுமன்றித் தலபுராணங்களே ஆராயும் போது அந்தச் செய்திகள் எல்லாம் பயன்பட்டன. பல தல புராணங்களை அவர் அச்சிட்டிருக்கிருர். அந்தப் புராணங் களின் குறிப்புரையில் தாம் கேட்டறிந்தும் நூல்வாயிலாக அறிந்தும் கொண்டு தொகுத்த செய்திகளைப் பயன்படுத்திக் கொண்டிருக்கிருர்,

திருமானுர்க் கிருஷ்ணயர்

ஆசிரியப் பெருமானுடன் இருந்து அவருடைய நூல் ஆராய்ச்சிக்குப் பெரிதும் உதவியவர் திருமானுர்க் கிருஷ்னேயர் என்பவர். அவர் மிகவும் புலமை உடையவர்; அயராத உழைப்பு உடையவர். ஆசிரியப் பெருமானின் பதிப்புக்களின் முகவுரையில் அவர் பெயரைப் பார்க்கலாம். அவருக்கு ஆசிரியர் தம்மால் இயன்ற பொருள் உதவியை மாதந்தோறும் செய்து வந்தார்.

தம்மைச் சார்ந்தவர்கள் நல்ல பதவிகளில் இருக்க வேண்டு மென்ற எண்ணம் எப்போதுமே ஆசிரியருக்கு உண்டு. சந்தர்ப்பம் நேரும்போது தம் மாணவர்களுக்கு உதவி செய்ய அவர் தயங்கியது

கிருஷ்ணையருக்கு ஏதாவது தக்க வேலை கிடைத்தால் செய்து வைக்கலாம் என்று எண்ணிக் கொண்டிருந்தார். பாலக்காட்டில் அரசினர் நடத்திய கல்லூரி ஒன்று இருந்தது. விக்டோரியா காலேஜ் என்று அதற்குப் பெயர். அந்த ஊரில் இருந்த செல்வ ராகிய ஜே. சின்னசாமி பிள்ளை என்பவர் ஆசிரியப் பெருமானிடம் மிக்க பக்தி பூண்டவர். அவ்வப்போது தம்மால் இயன்ற சிறு உதவிகளைச் செய்து வருவார். அடிக்கடி கடிதங்கள் எழுதி, என்ன வேலே நடந்து கொண்டிருக்கிறது என்று விசாரித்து வருவார். பாலக்காடு நகரசபைத் தலைவராகவும் அவர் இருந்தார்.