பக்கம்:என் ஆசிரியப்பிரான்.pdf/36

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24 என் ஆசிரியப்பிரான்

ஒரு சமயம் அவர் ஆசிரியப் பெருமானுக்குத் தங்கள் ஊர்க் கல்லூரிக்கு ஒரு நல்ல தமிழ்ப் பண்டிதர் வேண்டும் என்று எழுதினர், ஆசிரியப் பெருமான் ஒருவரைத் தேர்ந்தெடுத்தால் அவருக்கு நல்ல திறமை இருக்கும் என்ற நம்பிக்கை அவருக்கு இருந்ததல்ை இப்படி எழுதினர். -

கிருஷ்ணயருக்கு ஏதாவது தக்க உத்தியோகம் வாங்கிக் கொடுக்க வேண்டுமென்று ஆசிரியப்பிரான் நினைத்திருந்த நேரத்தில் இக்கடிதம் வந்தவுடன், இதுவும் இறைவன் திருவருள் தான் என்று எண்ணி, அவரை அங்கே அனுப்பினர்.

ஆசிரியப் பெருமானிடத்தில் இருந்து வந்தவராகையால் அவரிடம் பிள்ளை மிகவும் மரியாதையாகப் பழகினர். அதைக் கண்டு கிருஷ்ணயருக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது. பெரிய பதவியில் இருக்கும் செல்வர் ஒருவர் தம்மிடம் அப்படிப் பழகு வதைக் கண்டு அவர் ஆசிரியப் பெருமான நினைத்துக் கொண்டார். தமக்கு எந்தத் தகுதியும் இல்லை என்பதையும், ஆசிரியப் பெருமானின் அன்பினுல்தான் இவ்வளவு சிறப்பும் தமக்குக் கிடைக்கிறது என்பதையும் அவர் நன்கு உணர்ந்தவர். ஆசிரியப் பெருமானுக்கு அவர் எழுதிய கடிதம் ஒன்றில், 'முன்னம் நான் அடைந்த நன்மைகளும், இன்னும் அடையும் நன்மைகளும் தங்கள் ஆசீர்வாதத்தினுல் அடைந்தனவே' என்று எழுதினர்.

திருவாவடுதுறை ஆதீனத்திற்கும், ஆசிரியப்பெருமானுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு என்பதைத் தமிழ்நாட்டில் உள்ள வர்கள் நன்கு அறிவார்கள். அவர் எழுதிய என் சரித்திரத்"தில் அந்தத் தொடர்பின் விரிவை உணரலாம். மீனாட்சிசுந்தரம் பிள்ளை யிடம் ஆசிரியர் மாணுக்கராக இருந்த காலம் முதல் அந்த மடத் திற்கும் ஆசிரியருக்கும் இருந்த தொடர்பு மேலும் மேலும் இறுகி வந்தது.

சாற்றுக் கவிகள்

மேலகரம் சுப்பிரமணிய தேசிகர் காலத்தில் பிள்ளையவர்கள் ஆதீன வித்துவானக இருந்தார். அப்போது ஆசிரியர் அவரிடம் படித்தார். அதன் பிறகு அம்பலவாண தேசிகர் பட்டத்திற்கு வந்தார். யாராவது திருவாவடுதுறை மடத்தில் உதவிபெற வேண்டுமென்று விரும்பினல், தாமே நேரில் அணுகினல் அது கிடைக்குமோ, கிடைக்காதோ என்று எண்ணி ஆசிரியப்பெருமான் மூலமாகச் சென்ருல் நிச்சயமாக உதவி கிடைக்கும் என்று தீர்மானித்து, அவருடைய உதவியை விரும்புவார்கள். அப்படிப் பெற்றவர்கள் எத்தனையோ பேர் உண்டு. -