பக்கம்:என் ஆசிரியப்பிரான்.pdf/37

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பழைய மரபு 25

அக்காலத்தில் ஒரு நூலை ஒருவர் வெளியிட்டால் அதற்குப் பல புலவர்கள் சாற்றுக்கவி அளித்திருப்பார்கள். சில நூல்களில் நூலின் அளவைவிடச் சாற்றுக் கவிகளின் அளவு மிகுதியாக இருக்கும். ஆசிரியப்பிரானுடைய சாற்றுக்கவி இருந்தால் தம் நூலுக்குப் புகழும் சிறப்பும் ஏற்படும் எனப் பலரும் விரும்பினர்கள். பலர் அவரிடம் சாற்றுக்கவிகளே வாங்கினர்கள்.

யாழ்ப்பாணத்தைச் சார்ந்த சபாபதி நாவலர் இந்தியாவில் வாழ்ந்து வந்தார். அக்காலத்தில் இவ்வாறு இங்கே இருந்தவர் பவர். 'திராவிடப் பிரகாசிகை என்ற நூலே அவர் எழுதினர். அது ஒருவகையில் தமிழ் வரலாற்றைச் சொல்வது. அதற்கு ஆசிரியப் பிரானிடமிருந்து சாற்றுக்கவி வாங்கவேண்டும் என்பது அவர் விருப்பம். தம் விருப்பத்தைத் திருவாவடுதுறை அம்பலவாண தேசிகர் மூலமாகத் தெரிவித்தார். ஆசிரியரும் சில சாற்றுக்கவிகளை எழுதிச் சபாபதி நாவலருக்கு அனுப்பினர்.

சூளைச் சோமசுந்தர நாயக்கர் என்பவர் சித்தாந்தம் என்ற பத்திரிகை நடத்தி வந்தார். அது மாதப் பத்திரிகை. தமக்கு உதவி புரிய வேண்டுமென்று அவர் கேட்கவே, ஆசிரியப்பெருமான் முடிந்த அளவு நண்பர்களிடமிருந்து உதவி தேடித் தந்தார்.

சரம கவி

திரு சி. வை. தாமோதரம் பிள்ளை அவர்கள் 1900-ஆம் ஆண்டு ஜனவரி 2 ஆம் தேதி காலமானர். பல காலம் அவரை ஆசிரியர் அறிந்தவர் ஆகையால், சரமகவி எழுதித் தர வேண்டுமென்று தாமோதரம் பிள்ளையைச் சார்ந்த இராஜரத்தினம் பிள்ளை ஆசிரியருக்கு எழுதினர். அப்படியே ஆசிரியரும் எழுதி அனுப் பினர்.

ஒருவர் இறந்து போனல் அவரைப் பற்றிய சரமகவிகளைப் பல புலவர்களை எழுதச் சொல்வி அவற்றைத் தொகுத்து வெளியிடும் பழக்கம் அந்தக் காலத்தில் மிகுதியாக இருந்தது. சில புலவர்கள் சரமகவி எழுதுவதிலே சிறந்தவர் என்று புகழ் பெற்றிருந்தார்கள்.

தமிழாசிரியர்களைத் தெரிந்தெடுத்தல்

அங்கங்கே உள்ள கல்லூரிகள், உயர்நிலைப் பள்ளிகள் ஆகிய

வற்றின் தமிழாசிரியர் பதவிகள் காலியானல் பலர் விண்ணப்பம் போடுவார்கள். அவர்களைத் தேர்ந்தெடுக்க ஆசிரியப் பெருமா