பக்கம்:என் ஆசிரியப்பிரான்.pdf/38

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26 என் ஆசிரியப்பிரான்

னுடைய உதவியை நாடிப் பலர் வருவார்கள். அவ்வாறே புலவர் களின் தகுதியைப் பரிசோதித்து அறிந்து பல பேர்களுக்கு வேலை வாங்கித் தந்திருக்கிருர்.

சில சமயங்களில் பள்ளி மேலாளர்கள், தங்கள் பள்ளிக்குத் தமிழாசிரியராகத் தேர்ந்தெடுக்கச் சில வினுக்களை எழுதி அனுப்பச் சொல்வார்கள். ஆசிரியரும் விளுக்கள் சிலவற்றை எழுதி அனுப்பு வார். தேர்வில் கலந்து கொள்பவர்கள் எழுதிய விடைகளே எல்லாம் ஆசிரியருக்கு அனுப்பி, அவற்றைப் பார்த்து, இவர் தகுதி உடைய வர் என்று ஆசிரியர் எழுதினால் அதனே மறுக்க முடியாத உறுதி யான தீர்ப்பாக எண்ணி, ஆசிரியப் பெருமான் தேர்ந்தெடுத்து. வரையே தமிழாசிரியராக அமர்த்துவார்கள்.

அந்தக் காலத்தில் புறநானூறு முதலிய நூல்களிலிருந்து சில பாடல்களை, பி.ஏ. படிப்புக்குப் பாடமாக வைப்பார்கள். அத்தகைய சமயங்களில் பாடமர்க வைக்கப் பெற்றுள்ள பாடல்களை மாத்திரம் மூலம், பழைய உரை, மாணவர்களுக்குப் பயன்படும். குறிப்புக்கள் முதலியவற்றுடன் ஆசிரியர் பதிப்பித்ததுண்டு. இவ்வாறு சிந்தாமணி விமலயார் இலம்பகம் முதலியவற்றைப் பதிப்பித்தார்.

900-ஆம்ஆண்டு பிப்ரவரி மாதத்தில் பாச்சிலாச்சிராமப் புராணத்தைப் பதிப்பித்தார். திருச்சி மாவட்டத்தில் உள்ள பாடல் பெற்ற தலம் அது. இப்போது திருவாசி என்று வழங்கு கிறது.

பரிபாடல் ஆராய்ச்சி

ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து, பரிபாடல் என்ற சங்க நூல் களின் ஆராய்ச்சி நடந்து வந்தது. எதையும் அவசரமாகப் பதிப் பிப்பது அவரது இயல்பு அன்று. மிகவும் ஆழமாகச் சோதனை செய்து, ஐயம் ஏற்பட்டால் அதனை வேறு நூல்களிலுைம், விசாரிக்க வேண்டியவர்களை விசாரித்தும் அறிந்துகொண்டு, செய்திகளைத் தெரிந்து கொண்ட பிறகே பதிப்பிப்பது வழக்கம்.

புறநானூற்றின் முகவுரையில் பரிபாடலை வெளியிட எண்ணி ருப்பதாக ஆசிரியர் எழுதியிருத்தார். அதனைப் பார்த்து, கொழும்பிலிருந்து பொ. குமாரசாமி முதலியார் என்ற செல்வர் அந்த நூலே வெளியிட்டால் தாம் பொருளுதவி செய்வதாக எழுதினர். அவர் அப்படி எழுதியதைக் கண்டவுடன் அந்த நூலே வெளியிட ஆசிரியர் துணியவில்லை. யார் எவ்வளவு அவசரப் பட்டாலும், தூண்டினலும் நன்முக ஆராய்ச்சி செய்து தமக்கு இழுத் திருப்தி உண்டானலொழிய எதையும் வெளியிடுவது அவர் வழக்கம் அன்று. - -