பக்கம்:என் ஆசிரியப்பிரான்.pdf/39

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. பிள்ளையவர்களும் அவர்கள் மாளுக்கர்களும்

பிள்ளையவர்கள் வரலாறு

ஆசிரியருக்குத் தம் ஆசிரியர் மீனட்சிசுந்தரம் பிள்ளையவர் களின் வரலாற்றை விரிவாக எழுத வேண்டுமென்ற எண்ணம் தோன்றி வளர்ந்து வந்தது. அதற்கான குறிப்புக்களைத் தொகுத்து வந்தார். பிள்ளையவர்கள் வாழ்ந்த காலத்தில் அவரோடு சேர்ந்து பழகியவர்கள் சிலர் அங்கங்கே இருந்தார்கள். பிள்ளையவர்களைப் பற்றித் தெரிந்த செய்திகளே எல்லாம் சேகரித்துத் தொகுக்கவேண்டு: மென்ற எண்ணம் உண்டானதால் சுதேசமித்திரன் பத்திரிகை வாயிலாக, தம்முடைய எண்ணத்தை வெளிப்படுத்தி, பிள்ளையவர் களைப் பற்றிய செய்திகள் தெரிந்திருந்தால் எழுதி அனுப்ப வேண்டு மென்ற வேண்டுகோளை அறிவித்திருந்தார். அது 1900-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 8-ஆம் தேதி வெளி வந்தது. அந்த வேண்டுகோளுக்கு எதிர்பார்த்த அளவு பலன் கிடைக்கவில்லை. யென்ருலும் கிடைத்த சில செய்திகளைப் பொன்னேபோல் போற்றி வந்தார்.

சவராயலு நாயகர்

புதுச்சேரியில் இருந்த சவராயலு நாயகர் என்பவர் மட்டும் 22-10-1900 அன்று ஒரு கடிதம் எழுதினர். ஏறக்குறைய நாற்பத் தைந்து வருஷத்திற்குமுன் நானும் தியாகராச செட்டியாரும் வேறு: சிலரும் அந்த மகா வித்துவானிடத்தில் வாசித்தோம். அவருக்கு என் மட்டிலிருத்த பகrத்தையும் மதிப்பையும் தாங்கள் அறியும் படிக்கும் பலசமயத்தில் அவரும் தியாகராச செட்டியாரும் வல்லூர்த் தேவராச பிள்ளை முதலியவர்களும் என்பேரில் பாடியிருக், கும் பாடல்களேத் தாங்கள் காணும்படிக்கும் நான் 1869-இல் அச்சிட் டிருக்கும் ஒர் புத்தகத்தை இன்று தங்களுக்கு இனமாகத் தபால் மார்க்கமாக அனுப்பியிருக்கிறேன்.

'இப்புத்தகத்தில் பற்பல இடங்களில் பிள்ளையவர்கள் பெயல் இருப்பதால் ஆங்காங்குக் குறிப்பிட்டிருக்கிறேன். ஆகையர்ா