பக்கம்:என் ஆசிரியப்பிரான்.pdf/40

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28 என் ஆசிரியப்பிரான்

முதல் ஏடு தொடங்கிக் கடைசி ஏடு வரையில் பார்வையிடும்படித் தங்களைக் கோருகிறேன். இதல்ை அவருடைய மாளுக்கர்களில் அநேகரைத் தாங்கள் தெரிந்து கொள்ளவும் கூடும்.

"தாங்கள் எழுதும் அவர் சரித்திரத்தில் அவர் பேரில் பாடியிருக் கும் பாடல்களையும் பல சமயத்தில் அவருக்கு நான் செய்த தோத் திரங்களையும் அவர் என்பேரில் கூறியிருக்கும் தமிழ் மாலை முதலிய பற்பல பாடல்களையும் நன்ருக எடுத்துக் காண்பிக்கும்படி தங்களை நிரம்பவும் பிரார்த்திக்கிறேன்' என்று அதில் எழுதினர்.

பிள்ளையவர்கள் பெருமையோடு தம் பெருமையும் உடன் வெளி வரவேண்டுமென்ற ஆசை அவருக்கு இருந்ததை இக் கடிதம் காட்டு கிறது.

தலங்களைப்பற்றிய செய்திகள்

அந்தக் காலத்தில் சிவாலயங்களில் ருத்திரகணிகையர் இருந்து சில தொண்டுகளைச் செய்து வந்தார்கள். அதனல் அவர்களுக்குத் தேவரடியார் என்ற பெயர் அமைந்தது. அது பிற்காலத்தில் வேறு விதமாக மாறி விட்டது.

ருத்திர கணிகையர் தொண்டுகளில் தட்டெடுப்பது என்பது ஒன்று; 'ஆலவாய்ச் சொக்கருக்குத் தட்ட தெடுக்கும் தளியிலார்' என்று விறலி விடுதூதில் வருகிறது. அவர்கள் பாடும் பாடல்களில் தலசம்பந்தமான பல செய்திகள் இருக்கும். இறைவன் இறைவிக்குரிய பெயர்கள் வடமொழியில் வழங்கி வந்தாலும் அவற்றிற்குச் சரியான தமிழ்ப் பெயர்கள் அந்தப் பாடல்களில் இருக்கும். இதனை அறிந்தவர் ஆசிரியர்.

ஒரு சமயம் ஆசிரியப் பிரான் புதுக்கோட்டைக்குச் சென்றி ருந்தார். அதற்கு அருகிலுள்ள குடுமியாமலே சென்று தரிசனம் செய்ய எண்ணினர். அக்காலத்தில் புதுக்கோட்டையில் இருந்த ரகுநாதையர் என்பவருடன் அவருடைய காரில் குடுமியாமலை சென் முர். சுவாமி தரிசனம் செய்த பிறகு, "இந்தத் தலத்துக்கு ருத்திர கணிகையர் இருக்கிருர்களா?' என்று கேட்டார். 'இருக்கிருர்கள்" என்று அங்கிருந்தவர்கள் சொன்னர்கள். அவர்களில் வ11.சானவர் யாராவது இருக்கிருர்களா?' என்று கேட்டார். 'இருந்தால் அவரை இங்கே வரும்படி சொல்ல வேண்டும்' என்றும் சொன்ஞர். 7 இப்படிக் கேட்கிருர்?" என்று யாருக்கும் ஒன்றும் விளங்க ఖిf6 డ} .