பக்கம்:என் ஆசிரியப்பிரான்.pdf/41

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிள்ளையவர்களும் அவர்கள் மாணு க்கர்களும் 29*

ஒரு கிழ ருத்திர கணிகை வந்தாள். 'அம்மா, உனக்குத் தட்டெடுக்கும்போது பாடும் பாட்டு தெரியுமா? தெரிந்தால் சொல்’’ என்று ஆசிரியர் சொன்னர். அந்த அம்மாள் தனக்குத் தெரிந்த பாடல்களைச் சொன்னுள். அவற்றை ஆசிரியர் குறித்துக் கொண்டார். அந்த அம்மாளுக்கு ஒரு ரூபாய் கொடுத் தனுப்பினர். பிறகு உடன் இருந்தவர்களைப் பார்த்து, 'இப்போது வர வரப் பழைய பழக்கங்களெல்லாம் மறைந்து வருகின்றன. தல சம்பந்தமான பல பழைய வரலாறுகள் சொல்வார் இல்லாமல் மறைந்துபோய் விடுகின்றன. இந்த மாதிரி உள்ள தாசிகள் பாடல்களில் தல சம்பந்தமான குறிப்புக்கள் இருக்கும். அவை பல காலமாகப் பரம்பரை பரம்பரையாக வந்திருப்பவை. இப்போ தெல்லாம் அவற்றைப் பாடுகிறவர்கள் குறைவாகப் போய்விட் டார்கள்' என்று சொல்லி வருந்தினர்.

தலங்களைப் பற்றிய ஆராய்ச்சியில் ஆசிரியருக்கு ஈடுபாடு இருந்தமையில்ை யாராவது எந்தத் தலத்தைப் பற்றியாவது விவரம் வேண்டுமென்று சொன்னல் ஆசிரியரிடம் வந்துதான் கேட்பார்கள். எங்கே கும்பாபிஷேகம் நடந்தாலும் பிரம்மோற்சவம் நடந்தாலும் பத்திரிகை அச்சிடுவதற்கு ஆசிரியப் பெருமான எழுதித் தரும்படியாக வந்து கேட்டார்கள். அவ்வாறு ஆசிரியப் பெருமான் எழுதிக் கொடுத்த கும்பாபிஷேகப் பத்திரிகைகள் பல.

எந்தத் தலத்துக்கு சென்று தரிசித்தாலும் ஆசிரியப்பெருமான் மூர்த்திகளைத் தரிசிப்பதோடு வருவதில்லை. அந்தத் தலத்தின் சிறப்பு, முர்த்திகளின் சிறப்பு, அங்கு வாழ்ந்திருந்த பக்தர்களின் வரலாறு ஆகியவற்றைத் தக்கவர்களிடம் கேட்டுத் தெரிந்து குறித்துக் கொள்வார். அந்தத் தலத்து மூர்த்திகளின் திருநாமங்கள் வடமொழியிலும் தமிழிலும் எவ்வாறு வழங்குகின்றன என்பதைத் தெரிந்து கொள்வார். தேவார ஆராய்ச்சிக்கு அவை பயன்படும் என்பது அவருடைய கருத்து.

தேவாரப் பதிப்பில் மாயூரம் தேவாரத்தில், 'அஞ்சொலான் உமை பங்கன்’ என்று வருகிறது. அந்தத் தலத்து அம்பிகையின் திருநாமம் அபயாம்பிகை என்பது. அது தமிழில் அஞ்சலை என வழங்கும்; அந்தப் பெயரைப் பலபெண்கள் வைத்துக் கொண்டிருப் அார்கள். இவற்றையெல்லாம் அறிந்த ஆசிரியர் தேவாரப்பதிகத் தின் சரியான பாடம் அஞ்சலாள் உமை பங்கன்’ என்று தெரிந்து கொண்டார். அஞ்சலாள், அஞ்சலை, அபயாம்பிகை மூன்றும் ஒரே பொருள் உடையன. -