பக்கம்:என் ஆசிரியப்பிரான்.pdf/42

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

:30 - என் ஆசிரியப்பிரான்

ஏமாற்றம்

ஆசிரியப்பெருமான் ஏட்டுச்சுவடிகளைத் தேடித் தொகுப்பதில் மிகவும் ஆர்வம் உடையவர் என்பதை அறிந்த பலர் தம்மிடம் இன்ன இன்ன சுவடிகள் இருக்கின்றன என்று எழுதுவார்கள். பணம் அனுப்பினல் அவற்றை அனுப்புவதாகவும் தெரிவிப்பார்கள். ஆசிரியரும் எந்தப் புற்றில் எந்தப் பாம்பு இருக்குமோ என்ற எண்ணத்தினுல் அவர்கள் கேட்ட பணத்தை அனுப்புவார். ஆளுல் பல சமயங்களில் அனுப்பிய பணத்திற்கு ஒரு பயனும்

கிடைத்ததில்லை

ஒரு சமயம் ஒரு தமிழ்ப்புலவர் தம்மிடம் சாப புராணம் என்ற சுவடி இருப்பதாக எழுதியிருந்தார். ஆசிரியர் அவருக்குச் சிறிது பணம் அனுப்பி, அதை அனுப்பிளுல் தாம் அதைப் பார்த்து விட்டுத்

திருப்பி அனுப்பி வைப்பதாக எழுதினர்.

சிலநாள்கள் கழித்து அவரிடமிருந்து அந்த நூல் வந்தது. அது எந்தச் சாபத்தைப் பற்றிய புராணமோ என்ற எண்ணத்தோடு அந்த ஏட்டுச் சுவடியை ஆசிரியர் பார்த்தார். அது சாப புராணம்’ அன்று; சரப புராணம்’. சிவபெருமான் சரப மூர்த்தியாக எழுந்தருளி அருள் பாலித்தார் என்பது ஒரு புராண வரலாறு. அந்தச்சரப மூர்த்தியைப்பற்றிய புராணம் அது. உண்மை தெரிந்த பிறகு அது சாப புராணமாக இல்லாவிட்டாலும் சரப புராணமாக இருந்ததல்ை ஒருவகையில் திருப்தி அடைந்தார்.

இப்படியே தம்மிடம் தமிழ் நெறி விளக்கம் இருக்கிறதென்றும்,

வளையாபதி இருக்கிறதென்றும், வேறு சில அரிய நூல்கள்

இருக்கின்றன என்றும் எழுதி ஆசிரியரிடம் பணம் பறித்தவர் பலர் உண்டு.

தமிழ்த்தாயின் அணிகள்

திருச்சிராப்பள்ளியில் எஸ். பி. ஜி. ஹைஸ்கூல் என்ற உயர்நிலைப் பள்ளி இருந்தது. அங்குள்ள செந்தமிழ்ச் சங்கத்தின் ஆண்டு விழா வுக்கு 1901 ஆம் ஆண்டு ஆசிரியப் பெருமானை அழைத்தார்கள்.

அந்த விழா 20-6-1901 இல் நிகழ்ந்தது. அப்போது ஆசிரியர் தமிழ்த்தாயின் பெருமையை எடுத்துச் சொல்லி, தமிழ் நூல்கள் எல்லாம் அந்தப் பெருமாட்டியின் அணிகலன்களாக விளங்குகின்றன என்று நயம்படப் பேசினர். அதை மிகவும் பாராட்டி, ஞான போதினி என்ற பத்திரிகை எழுதியது.