பக்கம்:என் ஆசிரியப்பிரான்.pdf/43

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிள்ளையவர்களும் அவர்கள் மாளுக்கர்களும் 31

தமிழ்த்தாயாகிய அணங்குக்குச் சிந்தாமணியே மார்பு மணி யாக நிலவுகிறது. சிலப்பதிகாரமே காற்சிலம்பு. இயலிசை நாடகம் என்பனவே அந்தச் சிலம்பின் ஒலி, மணிமேகலையும், மதுரைக் காஞ்சியும் தண்டமிழ்த்தாயின் இடையணிகள். காதிலணியும் குண்டலமே குண்டலகேசி. கைவளையே வளையாபதி, சூளாமணியே முடியில் தரிக்கும் மணி. வெண்பாமாலை வாடாத பூமாலை. தமிழ்ச் செய்யுட்களில் அமைந்திருக்கிற சீர் முப்பதும் தண்டமிழ்த் தாய்க்கு வந்த சீர்கள். பொன்வண்ணத்தந்தாதி அந்தப் பெண்ணின் வண்ணம். கலைகள் அறுபத்து நான்கும் அந்தப் பெண் அணங்கு தரிக்கும் ஆடைகள். திருவாசகம், திருவாய்மொழி என்பன தமிழணங்கின் வாய்மொழி.”

இப்படி ஆசிரியர் எடுத்துச் சொன்ன கருத்துக்களைக் கேட்டுப் பலருக்கும் மிக்க வியப்பு உண்டாயிற்று. அக்காலத்தில் இந்தப் பழைய நூல்களைப் பற்றி மிகுதியாக அறிந்தவர்கள் குறைவு. இப்போது இதையே விரித்துப் பலபேர் சொல்லிக் கொண்டிருக் கிருர்கள். முதல் முதலாக இந்தக் கற்பனையை ஆசிரியப் பெரு மானே திருச்சிராப்பள்ளியில் வெளியிட்டார்.

நல்ல சகுனம்

ஒரு நாள் ஒரு முக்கியமான காரியமாக ஒருவரைச் சென்று ஆசிரியர் பார்க்க வேண்டியிருந்தது. அதற்காக ம. வீ. இராமானுஜா சாரியாரை அழைத்துக் கொண்டு புறப்பட்டார். தமிழில் பாரதம் முழுவதையும் பலரைக் கொண்டு மொழி பெயர்க்கக் செய்து செப்பஞ் செய்து வெளியிட்டவர் அவர் ஐயரவர்களிடம் சில நூல் களைப் பாடம் கேட்டவர்.

வீட்டை விட்டு வெளியே காலை வைத்தவுடன் வீதியில்,ஒற்றைப் .பிராமணர் வந்தார். அப்படி வந்தால் அதை அபசகுனம் என்று சொல்வார்கள். ஆகையால் இராமானுஜாசாரியார், 'இப்போது புறப்பட வேண்டாம். இன்னும் சிறிது நேரம் கழித்துப் புறப்பட லாமே!” என்று சொல்லித் தயங்கினர்.

'ஏன்?" என்று ஆசிரியர் கேட்டார். சகுனம் சரியாக இல்லை" என்று அவர் சொல்ல, ' என்ன சகுனம்?’ என்று கேட்டார்.

'இதோ நம் எதிரில் ஒற்றைப் பிராமணர் வருகிரு.ர். அதனல் தான் சொன்னேன்' என்ருர் இராமானுஜாசாரியார். -

"அவரைப்பற்றிக் கவலைப்பட வேண்டாம். நாம் போய் நம் காரியத்தை வெற்றியாகவே முடித்துக்கொண்டு வரலாம். போக