பக்கம்:என் ஆசிரியப்பிரான்.pdf/44

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 என் ஆசிரியப்பிரான்

லாம், வாருங்கள்' என்று இராமானுஜாசாரியாரை அழைத்துக் கொண்டு ஆசிரியர் சென்ருர்,

போன இடத்தில் அந்த அன்பர் இருந்தார். சொல்ல வேண் டியதை எல்லாம் சொல்லி, என்ன காரியமாகச் சென்ருரோ அதற்கு வேண்டிய ஏற்பாடுகளே எல்லாம் பண்ணிவிட்டு ஆசிரியப் பெருமான் இராமானுஜாசாரியாரோடு தம் இல்லத்திற்குத் திரும்பி வந்து சேர்ந்தார்.

வந்தபிறகு ஆசிரியர் இராமானுஜாசாரியாரிடம் சொன்னர்; 'நாம் புறப்பட்டபோது சகுனம் சரியாக இல்லை என்றீர்களே! இப்போது என்ன குறை வந்துவிட்டது? எல்லாம் சரியாகத் தானே முடிந்திருக்கிறது? நான் அப்போது அந்தச் சகுனத்தைப்பற்றிக் கவலைப்பட வேண்டாம் என்று சொன்னது சரியாயிற்று அல்லவா?" என்று கேட்டார்.

'உங்களுடைய தவத்தினுல் அபசகுனம் கூட உங்களுக்கு. ஒன்றும் செய்வதில்லை' என்ருர் இராமானுஜாசாரியார்.

"அது அல்ல காரணம். எதிரே வந்த பிராமணரை எனக்கு நன்ருகத் தெரியும். கள் குடம் எதிரே வந்தால் நல்ல சகுனந் தானே?' என்று கேட்டார்.

'பிராமணர்தாமே வந்தார்? கள்குடம் எங்கே வந்தது?" என்று சொல்லி இராமானுஜாசாரியார் விழித்தார்.

எதிரே வந்த பிராமணர் எப்போதும் கள்ளில் நீந்திக்கொண்டு தான் இருப்பார் என்பது எனக்கு முன்பே நன்ருகத் தெரியும். அவரே கள்குடந்தான். ஆகவே, அவர் வந்ததை நல்ல சகுனம் என்று நினைத்தேன்' என்ருர் ஆசிரியர். இராமானுஜாசாரியார் சிரித்தார். -

பிள்ளையவர்களைப்பற்றிய சொற்பொழிவு

பிள்ளையவர்களுடைய வரலாற்றை எழுத வேண்டுமென்ற ஊக்கம் யாராவது வரும்போதெல்லாம் ஆசிரியப் பெருமானிடம் வெளியாயிற்று. எங்கே போனலும், யாருடன் உரையாடினுலும் பிள்ளையவர்களைப் பற்றிய செய்திகளைச் சொல்லாமல் இருக்க மாட்டார். ஒரு மணி நேரம் பிள்ளையவர்களைப் பற்றி எதுவும் சொல்லாமல் பேச வேண்டுமென்று நிபந்தனை விதித்தால் அது அவரால் முடியாத காரியம்.