பக்கம்:என் ஆசிரியப்பிரான்.pdf/45

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிள்ளையவர்களும் அவர்கள் மாளுக்கர்களும் 33

பிள்ளையவர்களைப் பற்றித் தம்மிடம் வருபவரிடமெல்லாம் அவ்வப்போது சில செய்திகளைச் சொன்னலும், அவரைப்பற்றி முழுமையாகப் பலரும் தெரிந்து கொள்ளும்படி செய்ய வேண்டு மென்ற அவா ஆசிரியருக்கு இருந்தது. ஒரு பெரிய கூட்டத்தில் பிள்ளையவர்களைப்பற்றிச் சொற்பொழிவு ஆற்ற வேண்டுமென்று எண்ணினர். அதனை அறிந்த அன்பர்கள் கும்பகோணம் போர்ட்டர் ஹாலில் அவரைப் பிள்ளையவர்கள் பெருமையைப்பற்றிப் பேச ஏற்பாடு செய்தார்கள்.

1909 செப்டம்பரில் கும்பகோணம் போர்ட்டர் டவுன் ஹாலில் பிள்ளையவர்கள் வரலாற்றைப்பற்றி விரிவாகச் சொற்பொழிவு ஆற்றினர். பிள்ளையவர்களைப் பற்றி அதிகம் தெரியாதவர்கள் கூட அதைக் கேட்டு, அவர் கம்பரைப் போன்றவராக இருப்பார் போலும்!” என்று அந்தக் கவிஞர் பெருமானப் பலரும் பாராட்டத் தொடங்கினர்கள். அப்படிப் பாராட்டும் போதெல்லாம் ஆசிரியப் பெருமானுக்கு எத்தனை பெருமை உண்டாயிற்று என்று சொல்லி முடியாது.

பணம் முன்பே வந்துவிட்டது

1899-ஆம் ஆண்டில் சில நாட்கள் ஆசிரியர் உடம்பு சுகமில் லாது துன்புற்ருர். காய்ச்சலும், இருமலும் அவரை மிகவும் துன்புறுத்தின. கல்லூரிக்குப் போகவும் முடியவில்லை. போளுலும் பாடம் சொல்ல இயலவில்லை. அவர் இருமுவதைக் கண்டு, மாண வர்கள், நீங்கள் இன்று பாடம் சொல்ல வேண்டாம். பின்னல் எல்லாவற்றையும் கேட்டுக் கொள்கிருேம். தயை செய்து சும்மா இருங்கள் என்று கேட்டுக் கொண்டார்கள். தம்முடைய கடமை யைச் சரிவரச் செய்ய முடியவில்லையே என்ற வருத்தம் ஆசிரியருக்கு உண்டாயிற்று.

அந்தக் காலத்தில் கும்பகோணம் நகரசபை மருத்துவ மனேயில் நெடுங்காடி என்பவர் தலைமை மருத்துவராக இருந்தார். ஆசிரியப் பெருமான் அவரிடம் சென்று தம் உடம்பைக் காட்டினர். அவர் ஜுரத்திற்கும் இருமலுக்குமான மருந்து, மாத்திரைகளே ஒரு வாரத் திற்குக் கொடுத்தார். ஆசிரியரின் உடம்பு குணமாகிவிட்டது. தம்முடைய வேலைகளுக்குப் பெருந்தடையாக இருந்த நோய் அவ்வளவு சீக்கிரம் நீங்கியவுடன் ஆசிரியருக்கு மிகவும் மகிழ்ச்சி உண்டாயிற்று. டாக்டர் நெடுங்காடியைப் போய்ப் பார்த்து நன்றி

,3 س-8604