பக்கம்:என் ஆசிரியப்பிரான்.pdf/46

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 என் ஆசிரியப்பிரான்

தெரிவித்து வர வேண்டும், தம்மால் முடிந்த அளவு கொஞ்சம் பணமும் கொடுத்து வரவேண்டும் என்று நினைத்து, டாக்டர் ஒய்வாக இருக்கும்போது அவரைப் போய்ப் பார்த்தார்.

'இப்போது உடம்பு நன்முகத் தேவலேயா? உங்கள் வேலே தடை யின்றி நடக்கின்றதா?' என்று டாக்டர் கேட்டார்.

'நான் நோயாளியாக உங்களிடத்தில் வந்தேன். உங்கள் மருந்தில்ை இப்போது பூரண குணமடைந்து விட்டேன். அதற்காகத் தான் உங்களைப் பார்த்து என் நன்றியைத் தெரிவித்துக் கொள்ள வந்திருக்கிறேன். தாங்கள் என்னிடமிருந்து எதையும் எதிர் பார்க்கவில்லை என்பது எனக்கு நன்ருகத் தெரியும். ஆனாலும் நான் கடனளியாக இருக்கக்கூடாதல்லவா? என் கடமையைச் செய்யக் காணிக்கை செலுத்திப் போக வந்திருக்கிறேன்' என்று சொல்லிப் பணத்தைக் கொடுக்கப் போனர். அப்போது டாக்டர் அதைத் தடுத்து விட்டார்.

"அப்படியே வைத்துக் கொள்ளுங்கள். உங்கள் பணம் எனக்கு முன்பே வந்துவிட்டது. இப்போது நீங்கள் ஒன்றும் கொடுக்க வேண்டாம்' என்ருர்.

“தாங்கள் சொல்வது ஆச்சரியமாக இருக்கிறதே! நான் யாரிட மும் பணம் அனுப்பவில்லையே! எனக்காக யார் வந்து கொடுத் தார்கள்? யாரும் கொடுத்தனுப்பியதாகச் சொல்லவில்லையே! தயை செய்து தாங்கள் இந்தப் பணத்தைப் பெற்றுக் கொள்ள வேண்டும்' என்று ஆசிரியர் மிக்க பணிவோடு வேண்டிக் கொண் டார்.

'இல்லை, இல்லை. எனக்குப் பணம் வந்துவிட்டது” என்று மறுபடியும் டாக்டர் சிரித்துக் கொண்டே சொன்னர்.

“தாங்கள் சொல்வது எனக்கு ஒன்றும் விளங்கவில்லை. சற்று விளக்கமாகச் சொல்ல வேண்டும் என்று ஆசிரியர் கேட்டுக் கொண்டார்.

'நான் சொல்வது உண்மைதான். தெளிவாகச் சொல்கிறேன். திருப்பனந்தாள் மடத்திற்கு நான் சில சமயம் போவேன். மடாதி பதிக்குச் சின்ன நோய் என்ருலும் அங்கிருந்து எனக்கு ஆள் வந்து விடும். உடனே நான் மடாதிபதியைப் போய்ப் பார்த்துச் சிகிச்சை செய்வேன். என்னுடைய சிகிச்சைக்காக மட்டுமன்றி, நான்