பக்கம்:என் ஆசிரியப்பிரான்.pdf/48

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36 என் ஆசிரியப்பிரான்

எண்ணினர். ஆகவே, திருமானுர்க் கிருஷ்ணயரை வருவித்து அந்தப் பள்ளிக்கூடத்தில் ஆசிரியராக அமர்த்தினர். கிருஷ்ண யருக்கும் ஆசிரியப் பிரானேடு மீண்டும் சேருவதற்கான வாய்ப்புக் கிடைத்ததில் அளவற்ற மகிழ்ச்சி உண்டாயிற்று.

பாயசத்துக்காகத் தாமதம்

1899-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஆசிரியர் இராமநாதபுரத் திற்குப் போயிருந்தார். பாண்டித்துரைத் தேவர் அவர்களிடம் அளவளாவி மகிழ்ச்சியுற்ருர். மறு நாள் அங்கேயிருந்து புறப்பட வேண்டியிருந்தது. அங்கிருந்து மதுரை வரைக்கும் வண்டியில் போக வேண்டும்; ரெயில் வசதி இல்லாத காலம் அது.

ஆசிரியரைப் பாண்டித்துரைத் தேவர் மதுரை வரைக்கும். கொண்டுபோய் விடுவதற்கு வண்டி ஏற்பாடு செய்ததோடு, இரண்டு பணியாளர்களையும் உடன் அனுப்பி வைத்தார்.

இராமநாதபுரம் சம்ஸ்தானத்தைச் சேர்ந்த சத்திரங்கள் பல அங்கங்கே இருந்தன. ஆசிரியருடன் வந்த பாண்டித்துரைத் தேவ. ருடைய ஆட்கள் அங்கங்கே சத்திர விசாரணைக்காரரிடம் ஆசிரியர் சேதுபதி மன்னருக்கு மிகவும் வேண்டியவர் என்பதைச் சொல்வி. அவருக்குத் தக்க உபசாரங்கள் பண்ணும்படி ஏற்பாடு செய்தார்கள்.

ஒரு நாள் இடையில் ஓர் ஊருக்கு வந்தபோது இருட்டிவிட்டது. மேற்கொண்டு பயணம் செய்வதற்கு அலுப்பாக இருந்ததலுைம் வசதிக் குறைவிலுைம் ஆசிரியரும் அவருடன் வந்தவர்களும் அந்த ஊர்ச் சத்திரத்திலேயே தங்கினர்கள். மறுநாள் காலையில் புறப் படலாம் என்ற எண்ணத்தோடு தங்கினர்கள்.

இராமநாதபுரத்திலிருந்து வந்திருந்த ஆட்கள் சத்திர விசாரணைக்காரரிடம் ஆசிரியரைப் பற்றிச் சொல்லியிருக்கிரு.ர்கள். அவர் எல்லோருக்கும் உணவு தயாரிப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்யலானர். எட்டு மணிக்கு ஏற்பாடு செய்யத் தொடங்கியவர் ஒன்பது மணியாகியும் உணவு அளிக்கவில்லை. மணி பத்தும் ஆகி விட்டது. எல்லோருக்கும் நல்ல பசி, பயணக் களைப்பினல் தூக்கமும் கண்ணைச் சுழற்ற ஆரம்பித்தது.

அப்போது ஆசிரியர் சத்திர விசாரணைக்காரரைக் கூப்பிட்டு, 'நெடுநேரம் ஆகிவிட்டது. வெறும் சாதம் குழம்பு இருந்தால்கூடப் போதும். வேறு அதிகமாக ஒன்றும் வேண்டாம். இராத்திரி வேளைத்ானே? சாப்பிட வரலாமா? என்று கேட்டார்.