பக்கம்:என் ஆசிரியப்பிரான்.pdf/49

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிள்ளையவர்களும் அவர்கள் மாளுக்கர்களும் 37

அவர் முதலில் கொஞ்சம் தயங்கினர். சமையல் எல்லாம் தயாராகிவிட்டது. ஐயா அவர்கள் முதல் முறையாக வந்திருக் கிறீர்கள். பாயசம் இல்லாமல் உணவு போடலாமா? பாயசத் திற்குப் பால் வாங்கி வரச் சொல்வி அப்போதே அனுப்பிவிட்டேன். பாயசம் இல்லாமல் சாப்பாடு போட்டேன் என்று மகாராஜா வுக்குத் தெரிந்தால் என்னைக் கடுமையாகக் கோபித்துக் கொள் வார். இரவு நேரம் ஆனதால் பால் வாங்கிவரப் போனவன் இன்னமும் வரவில்லை. அவன் வந்தவுடன் இலை போட்டுவிடுகிறேன்; கொஞ்சம் காத்திருக்க வேண்டும்' என மிக்க பணிவாக வேண்டிக் கொண்டார்.

"நாங்கள் காத்திருப்போம். ஆனல் எங்கள் பசியும் தூக்கமும் காத்திருக்கமாட்டோம் என்கின்றன. பாயசம் இல்லாவிட்டாலும் போகிறது. நீங்கள் இருப்பதைப் போடுங்கள். பசிக்கு எந்த உணவாக இருந்தாலும் அமிர்தந்தான்' என்று வற்புறுத்தி, பாயசம் இல்லாமல் அன்று அங்கே கிடைத்த உணவை உண்டார். ஆனாலும் சத்திரத்தில் இருந்தவருக்கு, பாயசம் இன்றி இந்தப் பெரியவருக்குச் சாப்பாடு போடவேண்டி நேர்ந்ததே என்ற குறை இருந்தது. 'நீங்கள் இதைப்பற்றிக் கவலைப்பட வேண்டாம். மகாராஜாவைச் சந்திக்கும்போது இங்கே எல்லா விதமான உபசாரமும் உணவுகளும் கிடைத்தன என்று சொல்லுகிறேன்' என்று ஆசிரியர் சொல்லவே, சத்திரத்து அதிகாரி அதைக் கேட்டு ஆறுதல் பெருமூச்சு விட்டார்.

இ. வை. அனந்தராமையர்

ஆசிரியர் புறநானுாற்றுப் பதிப்பு முடிந்த பிறகு பிள்ளையவர்கன் இயற்றிய புராணங்களே எல்லாம் வெளியிட வேண்டிய முயற்சிகளைச் செய்து வந்தார். அப்போது இ.வை. அனந்தராமையர் என்பவர் ஆசிரியருடன் இருந்து மிக்க உதவி செய்தார்; இடையாற்றுமங்கலத்தில் பிறந்து, தமிழ் நன்கு படித்துச் செய்யுள் இயற்றும் ஆற்றலையும் பெற்றவர் அவர் ஆசிரியர் தம்மாலான உதவிகளை அவருக்குச் செய்து கொடுத்தார்; ஒரு பள்ளிக்கூடத்தில் வேலையும் வாங்கி வைத்தார்.

பிற்காலத்தில் இந்த அனந்தராமையரே சென்னை மாநிலக் கல்லூரியில் ஆசிரியர் அவர்களுக்குப் பின் தமிழாசிரியராக இருந் தார். தாமும் தமிழ் நூல்களைப் பதிப்பிக்க வேண்டும் என்ற விருப்பம் அவருக்கு உண்டாயிற்று. அதற்குரிய தகுதியும் இருந்தது. முன்பே சி. வை. தாமோதரம் பிள்ளை கலித்தொகையைப் பதிப்பித்