பக்கம்:என் ஆசிரியப்பிரான்.pdf/50

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 என் ஆசிரியப்பிரான்

திருந்தாலும் அது திருத்தமாக இல்லை. ஆகவே அதைப் பதிப்பிக்கத் தொடங்கினர். ஆசிரியரிடம் பழகியவராதலின் அவர் பதிப்பிக்கும் முறையையே மேற்கொண்டு அந்த நூலைப் பதிப்பித்தார். அதன் பிறகு ஐந்திணை எழுபது என்பதையும் வெளியிட்டார்.

தமிழ்ச் சங்கம்

மதுரையில் கடைச் சங்கம் இருந்தது, அதில் 49 புலவர்கள் இருந்து தமிழ் ஆராய்ந்தார்கள் என்ற வரலாற்றை இறையனர் அகப்பொருளில் பார்க்கிருேம். மறுபடியும் அங்கே ஒரு தமிழ்ச் சங்கத்தை ஏற்படுத்திப் புலவர்களைக் கொண்டு தமிழை ஆராய்ந்து, மாணக்கர்களுக்குத் தமிழைக் கற்பிக்கவேண்டுமென்று பாலவனத்தம் ஜமீன்தாராகிய பாண்டித்துரைத் தேவர் எண்ணினர். எப்போதும் தமிழ் சம்பந்தமான வேலைகளைச் செய்வதில் அவருக்கு ஆர்வம் அதிகம். தமிழ்ச்சங்கத்தை ஏற்படுத்துவதற்குப் பல வகையான யோசனைகளை எல்லாம் செய்து 1901 மே மாதம் அதைத் தொடங் கினர். தாம் தமிழ்ச்சங்கத்தைத் தொடங்கியிருப்பதாகவும், அதற்கு வேண்டிய உதவிகளை எல்லாம் செய்யவேண்டுமென்றும் ஆசிரியப் பெருமானுக்கு எழுதினர். ஒவ்வோர் ஆண்டு விழாவிலும் முதல் நாள் யாரேனும் பெரிய மனிதர்கள், அரசாங்கத்தில் பெரிய பதவி வகிப்பவர்கள் தலைமை தாங்கி நடத்துவார்கள். பெரும்பாலும் ஆசிரியப் பெருமான் இரண்டாவது நாள் நடக்கும் புலவர் பேரவையில் தலைமை தாங்கி அச் சபையை நடத்தி வந்தார். அப்போது பலர் ஆராய்ச்சி உரைகளை வாசிப்பார்கள். தமிழ்ச்சங்கத் தில் தமிழைப் பயிற்றுவிக்கின்ற ஒரு கல்லூரியும் அமைந்திருந்தது. அங்கே பல ஏட்டுப் பிரதிகளையும், அச்சுப் புத்தகங்களையும் சேகரித்து வைத்திருந்தார்கள். மாதப் பத்திரிகை ஒன்று வெளியிட வேண்டு மென்ற ஆசைகூடப் பாண்டித்துரைத் தேவருக்கு இருந்தது. பின்னல் "செந்தமிழ் என்றபெயருடன் ஒரு பத்திரிகையையும் வெளியிட் L-ITH".

சென்னைக்கு வர மறுத்தது

1900-ஆம் ஆண்டு சென்னையில் பல தமிழ் அன்பர்கள் சேர்ந்து திராவிட பாஷா சங்கம் என்ற ஒரு சங்கத்தை ஏற்படுத்தினர்கள். அப்போது கல்வித்துறையில் பணியாற்றி வந்த சேஷாத்திரி ஆச்சார் என்பாரும், ஜே. லாரன்ஸ் என்ற பாதிரியாரும் அந்தச் சங்கத்தின் செயலாளர்களாக இருந்தார்கள். தமிழின் தொடர்புள்ள இடங் களில் எல்லாம் ஆசிரியப்பிரானுடைய தொடர்பும் இருந்தால் மதிப்பு மிகும் என்ற எண்ணம் யாவருக்கும் இருந்தது. ஆகவே, அச்சங்கத்தின் கெளரவ அங்கத்தினராக இருக்க வேண்டுமென்று