பக்கம்:என் ஆசிரியப்பிரான்.pdf/51

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிள்ளையவர்களும் அவர்கள் மாளுக்கர்களும் 39

ஆசிரியப் பெருமானை அவர்கள் கேட்டுக் கொண்டார்கள். ஆசிரியரும் ஒப்புக்கொண்டார்.

சில காலத்திற்குப் பிறகு அந்தச் சங்கத்தின் செயலாளராக இருந்த சேஷாத்திரி ஆச்சார் கும்பகோணத்திற்கு வந்தார்; ஆசிரியரை வந்து பார்த்தார்.

"நாங்கள் நிறுவியிருக்கிற திராவிட பாஷா சங்கம் நன்ருக விருத்தியாகவேண்டுமென்று ஆசைப்படுகிருேம். அதற்கு வேண்டிய முயற்சிகள் நடந்து வருகின்றன. நீங்கள் அதன் அங்கத்தினராக இருப்பதே ஒரு சிறப்பு. எங்கள் சங்கம் சென்னையில் இருக்கிறது. தாங்கள் கும்பகோணத்தில் இருக்கிறீர்கள். அதனுல் அடிக்கடி தங்களேச் சந்தித்துத் தங்கள் யோசனைகளைக் கேட்க முடிகிறதில்லை. எனவே தாங்கள் சென்னையில் இருந்தால் எங்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும். அடிக்கடி தங்கள் கருத்துக்களை அறிந்து நடக்க முடியும். தாங்கள் சென்னைக்கு வந்தால் என்ன?' என்று கேட்டார்.

'நான் எப்படி சென்னைக்கு வருவது? இங்கேதானே எனக்கு உத்தியோகம் இருக்கிறது?’ என்ருர் ஆசிரியர்.

“தாங்கள் சென்னைக்கு வருவதாக இருந்தால், அங்கே உள்ள மாநிலக் கல்லூரிக்குத் தங்களை மாற்றும்படி நானே ஏற்பாடு செய்கிறேன். எனக்குக் கல்வித்துறையில் உள்ள எல்லோரையும் தெரியும். இதை யார் மூலமாகச் செய்ய வேண்டும் என்பதும் நன்ருகத் தெரியும். தாங்கள் சென்னைக்கு வருவதாக ஒரு வார்த்தை சொல்லுங்கள், போதும்' என்ருர்.

அப்போது சென்னை மாநிலக் கல்லூரியில் பிராயம் முதிர்ந்த ஒருவர் தமிழாசிரியராக இருந்தார். அவருக்குச் சென்னையே சொந்த ஊராகவும் இருந்தது. சென்னைக்குத் தாம் வந்தால் பதிப்பு வேலை களை எளிதாக நிறைவேற்றலாம் என்ற எண்ணம் ஆசிரியருக்கு உண்டு. என்ருலும் தம்மால் அந்த முதியவருக்கு வயது முதிர்ந்த காலத்தில் இடையூறு ஏற்படுவதை ஆசிரியர் விரும்பவில்லை.

'சென்னைக்கு வருவதனால் எனக்குப் பல வித நன்மைகள் உண்டு என்பதை நான் அறிவேன். ஆனல் இப்போது சென்னை வர நான் விரும்பவில்லை. இங்கே இருப்பதால் அடிக்கடி திருவாவடுதுறை சென்று சந்நிதானத்தைப் பார்த்து வர முடிகிறது. அவர்களைப் பார்ப்பதனால் எனக்கு ஊக்கம் மிகுதியாகிறது. என்னை வளர்த்து உருவாக்கியதே அந்த ஆதீனந்தானே? இறைவன் திருவருள் இருந் தால் நான் பிறகு சென்னை வருவதுபற்றி யோசிக்கிறேன்' என்று சொல்லி அனுப்பிவிட்டார்.