பக்கம்:என் ஆசிரியப்பிரான்.pdf/52

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8. அயல் நாட்டு அன்பர்கள் ஜூலியன் வின்சன் மாளுக்கர்

1902-ஆம் வருடம் கோடை விடுமுறைக்குப் பிறகு காரைக் காவிலிருந்து பேராசிரியர் ஜூலியன் வின்சன் மள்ளுக்கர் ஒருவர் கும்பகோணத்திற்கு வந்தார். ஜூலியன் வின்சனுக்கும், ஆசிரியருக் கும் நெடுநாள் பழக்கம். அவர் அடிக்கடி ஆசிரியருக்குக் கடிதம் எழுதுவது உண்டு. வில்வவனப் புராணம் என்ற நூலே அவரே தம் கையினல் எழுதி, அதன் மேல் அட்டையில் சிவலிங்கத்தின் உருவத் தையும் தமிழில் ஒரு விருத்தத்தையும் எழுதியிருந்தார். என்ன என்ன தமிழ் ஏட்டுச் சுவடிகள் பாரிஸ் மாநகர நூல் நிலையத்தில் உள்ளன என்னும் விவரத்தையும் தெரிவித்திருந்தார்.

பிரெஞ்சுக்காரர்கள் புதுச்சேரியை ஆண்டதனால் இங்கிருந்து பல தமிழ் ஏட்டுச் சுவடிகளை அவர்கள் பாரிசுக்கு எடுத்துச் சென்ருர்கள். இங்கே கிடைக்காத பல ஏட்டுச்சுவடிகள் அங்கே இருக்கின்றன. இங்கே பழங்காலத்தில் அச்சிடப்பெற்ற பல நூல்களும் அங்கே இருக்கின்றன. நான் பாரிஸ் மாநகரம் சென்றபோது அந்தத் தமிழ் நூல் தொகுதிகளை அங்கே பார்த்தேன்.

வின்சனின் மாளுக்கர் தமிழகம் வந்தபோது தஞ்சாவூரில் லேனல் பைபர்ட் (Lionel Byburt) என்பவர் சப் கலெக்டராக இருந்தார். இந்தப் பிரெஞ்சுக்காரர் அவருடைய விருந்தாளியாகத்தான் தங்கி யிருந்தார். ஜூலியன் வின்சன் ஆசிரியர் பெருமையைச் சொல்லக் கேட்டவராதலின் ஆசிரியரைப் பார்க்க வேண்டுமென்ற ஆவலுடன் இருந்தார். அவர் பெயர் ஃபொண்டேனியோ. ஆகவே ஆசிரியர் இருக்கும் இடத்தைத் தெரிந்து கொள்வதற்குச் சப் கலெக்டருடைய சேவகன் ஒருவன அழைத்துக் கொண்டு அவர் ஒரு நாள் கும்ப கோணம் வந்தார். - -

ஆசிரியரைச் சந்தித்து ஜூலியன் வின்சன் அடிக்கடி ஆசிரியரைப் பற்றிச் சொல்வது உண்டு என்றும், ஆசிரியர் தமிழுக்குச் செய்த தொண்டைப்பற்றிப் பாராட்டிச் சிலவிடங்களில் எழுதியிருப்ப தாகவும் அவர் சொன்னர். அவர் பதிப்பித்துள்ள ஒரு தமிழ் நூலின் பிரெஞ்சு மொழி பெயர்ப்பையும் வழங்கினர். ஒரு மணி நேரம் அந்தப் பிரெஞ்சுக்காரர் ஆசிரியருடன் பேசிக் கொண்டிருந் தார். அப்போது பேராசிரியர் சுந்தரராமையர் உடன் இருந்து