பக்கம்:என் ஆசிரியப்பிரான்.pdf/53

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அயல் நாட்டு அன்பர்கள் 41

அவர் சொன்னதை மொழி பெயர்த்துச் சொன்னர். ஆசிரியரிடம் இருந்த ஏட்டுச் சுவடிகளையும் கடிதப் பிரதிகளையும் கண்டு அந்தப் பிரெஞ்சுக்காரர் வியப்புற்ருர்.

புதுச்சேரி, காரைக்கால் முதலிய பிரெஞ்சு ஆட்சியில் இருந்த இடங்களுக்குப் எல்லாம் போய்விட்டுத் தம் ஊருக்குப் போவதாக இருந்தார். ஏதாவது ஒரு நூலைக் கொடுத்தால் அதைப் போகும் இடங்களில் படித்துவிட்டு, மறுபடியும் அனுப்பிவிடுவதாக ஆசிரிய ரிடம் கேட்டார்.

ஆசிரியர் பழைய காஞ்சிப்புராணக் கடிதப் பிரதி ஒன்றை அவரிடம் வழங்கினர். அதை ஏதோ புதையல் கிடைத்ததைப் போல அந்தப் பிரெஞ்சுக்காரர் வாங்கிக்கொண்டார். தாம் போகும் இடங்களில் எல்லாம் அதைப் படித்துவிட்டு, இரண்டு வாரத்தில் அதை ரிஜிஸ்தர் தபாலில் அனுப்பினர்.

தஞ்சாவூரில் இருந்த சப் கலெக்டரிடம் அந்தப் பிரெஞ்சுக்காரர் ஆசிரியப் பெருமானின் உழைப்பையும், அவரது விரிந்த புலமையை யும், அவர் பதிப்பித்த நூல்களால் தமிழுக்கு உண்டான ஏற்றத்தை யும் எடுத்துச் சொல்லியிருக்கிரு.ர். ஏட்டுச்சுவடியில் உள்ளதை ஆராய்ந்து பதிப்பிப்பது என்பது மிகவும் அருமையான காரியம் என் பதையும் அவர் நன்முக விளக்கியிருக்கிரு.ர். இரண்டாயிரம் ஆண்டு களுக்கு முன் தோன்றிய நூல்கள் இன்றும் படிப்பதற்கு உரியன வாக இருப்பதை அறிந்து அவர் வியப்பில் ஆழ்ந்தார்.

கலெக்டர் பாராட்டு

அதன் பயனுக ஆசிரியப்பெருமானுக்கு ஒரு நன்மை கிடைத்தது. 1903-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல்தேதி அன்று 7-ஆம் எட்வர்ட் மன்னர் முடிசூட்டுவிழாக் கொண்டாட்டம் நடந் தது. தஞ்சை மாநகரத்தில் இருந்த கலெக்டர் ஒரு பேரவையைக் கூட்டி ஒரு விழா நடத்தினர். அதற்கு வரவேண்டுமென்று ஆசிரியப் பெருமானுக்கும் சப்கலெக்டர் ஒரு கடிதம் எழுதினர். அதன்படியே ஆசிரியர் சென்றபோது தமிழ் நூல்களின் பெருமையை உணர்ந்து, அதன் சிறப்பை உலகுக்கு எடுத்துக்காட்டியதற்காக ஒரு பாராட்டி தழை ஆசிரியருக்கு அளித்தார். உண்மையான உழைப்பை அரசினர் பாராட்டியதை அறிந்து யாவரும் களி கொண்டனர்.

சீகாழிக் கோவை

பிள்ளையவர்கள் இயற்றிய நூல்களை எல்லாம் நன்ருகப் பதிப் பித்துத் தமிழ் உலகத்திற்கு வழங்க வேண்டுமென்ற ஆசை நெடுங்