பக்கம்:என் ஆசிரியப்பிரான்.pdf/54

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42 என் ஆசிரியப்பிரான்

காலமாக ஆசிரியப் பெருமானுக்கு இருந்தது. பிள்ளையவர்களின் வரலாற்றைப்பற்றி அங்கங்கே சிறப்புரையாற்றினர். எங்கே சொற். பொழிவு செய்தாலும் பிள்ளையவர்களைப் பற்றிப் பேசாமல் இருக்க மாட்டார். அந்த மாபெரும் கவிஞரின் அருங்குணங்களைப் பற்றி அங்கங்கே பல பல சுவையான நிகழ்ச்சிகளைச் சொல்லுவார்.

சீகாழிக் கோவை பாடியது பற்றியும் வேதநாயகம் பிள்ளை அரங்கேற்றத்துக்கு வந்திருந்து சிறப்பித்ததையும் அப்போது நடந்த சுவையான நிகழ்ச்சிகளையும் சிலரிடம் சொல்லிக்கொண்டிருந்தார். சீகாழிக் கோவையின் பெருமையை உணர்ந்து இடமணல் என்னும் நகரிலுள்ள விஜயராகவன் என்பவர் அந்த நூலே அச்சிடும்படி ஆசிரியரிடம் சொன்னர் 50 ரூபாய் பணமும் கொடுத்து எப்படி யாவது அதை நிறைவேற்ற வேண்டுமென்று வேண்டிக் கொண் டார். அப்படியே அந்த நூல் அச்சேறியது. அதை அரங்கேற்றிய போது ஜில்லா முன்சீப்பாக இருந்த வேதநாயகம்பிள்ளை 20 பாடல்கள் பாடி அந்தக் கோவையைச் சிறப்பித்தார். அவற்றில் சில சுவையான பாடல்கள் வருமாறு:

" பிரமபுரத் தீசர்மேல் மீளுட்சி சுந்தரமால் பெட்பிற் செய்த

வரமுறுகோ வையைக்கேட்போர் மகிழுவர்; அஞ் சுவன்தமியேன்

வள்ளி னிற்கேட் - டரவரசு சிரமசைக்கின் தரையசையும், வரையசையும்,

அசையும் ஆழி; மரம்.அசையும், மன அசையும், மன்னுயிர்எல் லாம்.அசைந்து

வருந்தும் என்றே." ' விதி.எதிரில் அரிமுதலோர் புகழ்புகலி ஈசரே,

விண்ளுேர் மண்ளுேர் துதிபொதிபல் பாமாலை பெற்றிருப்பீர்; மீனட்சி

சுந்த ரப்பேர் மதிமுதியன் கோவையைப்போல் பெற்றீர்கொல்? இக்காழி வைப்பில் நீதி அதிபதிகாம் என அறிவீர்; நம்முன்னம் சத்தியமாய்

அறைகு வீரே.'

ஜூலியன் வின்சனின் மாளுக்கர் புதுச்சேரி சென்றவுடன் தாம் ஆசிரியரைப் பார்த்த விவரங்களைப் பாரிசில் இருந்த ஜூலியன் வின்சனுக்கு எழுதினர். அதைப் பார்த்துப் பாரிசிலிருந்து அந்த அறிஞர் மனம் மிகவும் மகிழ்ந்து ஆசிரியருக்கு ஒரு கடிதம் எழுதினர்.