பக்கம்:என் ஆசிரியப்பிரான்.pdf/55

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அயல் காட்டு அன்பர்கள் - 43.

“எமதன்பிற்குரிய எவ்வுலகும் புகழ்ந்து வணங்கும் மாட்சிமை, யுடைய பண்டிதனே!' என்று தம் கடிதத்தைத் தொடங்கி யிருந்தார்.

இப்படி அவர் எழுதும் ஒவ்வொரு கடிதத்திலும் ஆசிரியரைப் பாராட்டிப் புகழ்ந்து எழுதுவது வழக்கம். அவருடைய மாளுக்கர் பாரிசுக்குத் திரும்பிய பின், தம் மாளுக்கர் பாரிசுக்குத் திரும்பி விட்டார் என்பதையும் பின்னர் அவர் எழுதினர்.

20-12-1901 அன்று வெள்ளிக்கிழமை; ஆசிரியருடைய சிறிய தகப்பனர் சின்னசாமி ஐயர் இறைவன் திருவடி அடைந்த நாள் அது. அவர் ஆசிரியருடன் இருந்து வந்தார். ஆசிரியரே அவரது ஈமக் கடன்களை நிறைவேற்றினதை முன்பே சொல்லியிருக்கிறேன்.

சேவுையா சாஸ்திரிகள் புதுக்கோட்டையில் திவானக இருந்து சிறப்புப் பெற்றவர். அவருக்கும் ஆசிரியருக்கும் பழக்கம் உண்டு. ஆசிரியருடைய சிறிய தகப்பனர் இறந்த அன்று இராமநாதபுரத் திலிருந்து பாஸ்கர சேதுபதி மன்னர் கும்பகோணம் வந்து சேவுையா சாஸ்திரியார் வீட்டில் தங்கியிருந்தார். அவரைப் பார்க்க வேண்டுமென்ற விருப்பம் ஆசிரியருக்கு இருந்தது. அன்றியும் திருவாவடுதுறை ஆதீனகர்த்தரும் ஆசிரியருக்கு அவரைப் பார்த்துவரும்படி எழுதியனுப்பினர்.

அன்று ஆசிரியருடைய சிறிய தகப்பனர் காலமானதால் ஆசிரியரால் இராமநாதபுரம் பாஸ்கர சேதுபதியைச் சென்று பார்க்க முடியவில்லை. அவரும் ஆசிரியரைச் சந்திக்கவேண்டு மென்று மிகவும் ஆசையுடன் இருந்தாராம். அந்த விருப்பம் நிறைவேருமற் போயிற்று.

பழைய திருவிளையாடற் புராணம்

1902 டிசம்பர் 21-ஆம் தேதி பாண்டித்துரைத் தேவர் ஆசிரியப் பெருமானுக்கு ஒரு கடிதம் எழுதியிருந்தார். மதுரைத் தமிழ்ச் சங்கத்தைப் புதிதாக ஏற்படுத்தியிருப்பதனல் அந்தச் சங்கத்தின் வாயிலாகப் பல அரிய தமிழ்நூல்களை வெளியிட வேண்டுமென்ற ஆசை அவருக்கு இருந்தது. ஆசிரியர் பதிப்பிக்கின்ற நூல்களே மதுரைத் தமிழ்ச் சங்கத்தின் வெளியீடாகக் கொண்டு வந்தால், சங்கத்திற்குப் பெருமை உண்டாகும் என்றும், பல நூல்கள் தமிழ், நாட்டிற்குக் கிடைக்கும் என்றும் எழுதினர்.

பழைய திருவிளையாடற் புராணத்தைப் பதிப்பிக்க ஆசிரியப் பெருமான் விரும்பினர். அதனைத் தமிழ்ச் சங்கத்தின் வெளியீடாகக் கொண்டு வரலாம் என்று பாண்டித்துரைத் தேவர் எழுதினர்.