பக்கம்:என் ஆசிரியப்பிரான்.pdf/56

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

.44 என் ஆசிரியப்பிரான்

'இம் மதுரைக்கும் தமிழுக்கும் சங்கத்திற்கும் உரிய முழு முதல் கடவுளாகிய ஆலவாயடிகள் திருவிளையாடல் ஆதலால்,சங்கத்திற்குத் தலைமை வித்துவாளுகிய தங்களால் பார்வையிடப் பெற்று அச்சிடப் பெறும் அந்நூலை இந்தத் தமிழ்ச்சங்கத்தின் முதல் வெளியீடாகக் கொண்டுவருவது இன்றியமையாச் சிறப்புடையதாக இருக்கும் என்று கருதி இப்படி எழுதினேன்’’ என்று தெரிவித்திருந்தார். ஆனல் அப்போது அதை வெளியிட முடியவில்லே. வேறு நூற் பதிப்பில் ஆசிரியர் ஈடுபட்டிருந்தார். பிற்காலத்தில் அந்த நூலை ஆசிரியர் வெளியிட்டபோது பாண்டித்துரைத் தேவர் அதற்குப் பொருளுதவி செய்தார்.

சுருக்கமும் பெருக்கமும்

சங்க நூல்களில் ஒன்ருகிய ஐங்குறுநூற்றை ஆராய்ந்து அதற்கு வேண்டிய குறிப்புக்களே ஆசிரியர் குறித்துக் கொண்டிருந்தார். யாழ்ப்பாணத்திலிருந்து வந்த ஒரு கடிதத்தில், நூலே மிகவும் பெருக்காமல் சுருக்கமாக வெளியிட்டால், பலவற்றைச் சீக்கிரத்தில் வெளியிடலாம் என்று ஒர் அன்பர் எழுதியிருந்தார்.

அதை நினைவில் வைத்துக்கொண்டு ஐங்குறுநூற்றை விரிவான முறையில் பதிப்பிக்கவேண்டுமென்று எண்ணியிருந்த ஆசிரியர் அந்த நூலைச் சுருக்கமான முறையில் 1902-ஆம் வருஷம் அக்டோபர் மாதம் வெளியிட்டார்.

அது வெளிவந்த பிறகு அந்த யாழ்ப்பாணத்து அன்பர், 'இப்படி எல்லாவற்றையும் சுருக்கிக்கொள்வீர்கள் என்று நான் நினைக்கவில்லை. நான் தவருக எழுதிவிட்டேன். இந்நூல் பற்றித் தங்களிடமிருந்து தமிழ்நாடு பெற்றிருக்க வேண்டிய பெரும் பயனே இழந்துவிட்டது; அதற்காக நான் மிகவும் வருந்துகிறேன்’ என்று ஒரு கடிதம் எழுதினர்.

ஜட்ஜூ சினம் ஆறியது

கும்பகோணத்தில் எஸ். கிருஷ்ணையர் என்ற ஹைக்கோர்ட் வக்கீல் இருந்தார். அவர் ஆசிரியருடைய சிறிய தாயாரின் பிள்ளை. வக்கீல் தொழிலே நன்முக நடத்தினர். வருமானமும் இருந்தது. கச்சேரியில் பேசும்போது மிகவும் அழுத்தந் திருத்தமாகப் பேசு வார். அவரது வாக்கு வன்மை மிகவும் சிறந்தது என்று எல்லோரும் கொண்டாடுவார்கள்.

அத்தகைய பெருமை இருந்தமையில்ை அவருக்கு ஒரு சமயம் அகங்காரம் மிகுதியாகி விட்டது. சப் கோர்ட்டில் வாதம் செய்யும்