பக்கம்:என் ஆசிரியப்பிரான்.pdf/57

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அயல் காட்டு அன்பர்கள் 45.

போது சப் ஜட்ஜ் வருந்தும்படியாகச் சில வார்த்தைகளைச் சொல்லி' விட்டார். அப்போதே சப் ஜட்ஜ் கிருஷ்ணையரைக் கண்டித்தார்.

கிருஷ்ணயர் வீட்டிற்கு வந்து சேர்ந்தார். தாம் பேசியது. தவறு என்பதை அப்போது உணரலார்ை. அதன் பயனுகச் சப் ஜட்ஜ் தம் உத்தியோகத்திற்கு ஏதேனும் தீங்கு செய்துவிடலாம். என்ற வருத்தம் அவர் உள்ளத்தில் ஏறிக்கொண்டது. தம். பிழைப்புக்கே தீங்கு வந்துவிட்டால் என்ன செய்வது என்ற எண்ணம் அவரது அடிவயிற்றைக் கலக்கியது. உடனே ஆசிரியப் பெருமானிடம் வந்தார். வரும்போது மிக்க வாட்டத்துடன் மெல்ல நடந்து வந்தார்.

என்ன இப்படி இருக்கிருய்?’ என்று ஆசிரியர் கேட்டார்.

என்னுடைய போதாத காலம். என்னுடைய நாக்கில் சனி இருந்தது. முன்பெல்லாம் நன்ருகப் பேசி வருவேன். அந்த அகங்காரத்தில் யாரிடம் என்ன பேசுகிருேம் என்பது தெரியாமல் சப் ஜட்ஜிடம் கச்சேரியில் சில தகாத வார்த்தைகளைச் சொல்லி விட்டேன். சப் ஜட்ஜுக்கு என்மேல் கோபம் வந்தது. இனிமேல் என் தொழிலுக்கு அவரால் ஏதேனும் இன்னல் வந்துவிடுமோ என்ற பயம் இப்போது பிடித்துக்கொண்டுவிட்டது. நான் இந்தச் சங்கடத்திலிருந்து எப்படித் தப்புவது என்று தெரியாமல் திண்டாடிக் கொண்டிருக்கிறேன். தாங்களே சப் ஜட்ஜிடம் என் விஷயமாகப் பேசி அவரது கோபத்தை ஆற்ற வேண்டும்' என்று. ஆசிரியர் காவில் விழுந்து கெஞ்சினர்.

ஆசிரியப் பெருமான், எதைக் கொட்டினலும் பொறுக்கிக் கொள்ளலாம். வார்த்தைகளை மாத்திரம் கொட்டக்கூடாது. குறை. வாகப் பேசினலும் தவறு இல்லை. வரம்பு மீறிப் பேசுவதனல் நமக்குச் சங்கடங்கள் உண்டாகின்றன என்று சொல்லி, சப் ஜட்ஜுடன் எனக்கு நேரில் பழக்கம் இல்லை. ஆனலும் அவருக்குத் தெரிந்தவர்கள் மூலம் என்ன செய்யலாம் என்று யோசித்து என்னல். முடிந்ததைச் செய்கிறேன்' என்று சொல்லி அனுப்பினர். இனி மேலாவது அடக்கமாகப் பேச வேண்டும் என்பதை மறந்து, விடாதே' என்று அவருக்கு அறிவுரை கூறினர்.

அடுத்த நாள் தம் கல்லூரியைச் சேர்ந்த கே. ஆர். துரைசாமி ஐயர் என்கிற பேராசிரியரை அழைத்துக்கொண்டு அந்தச் சப் ஜட்ஜைப் பார்க்கப் போனர். குருமூர்த்தி என்பது அந்தச் சப். ஜட்ஜின் பெயர். -