பக்கம்:என் ஆசிரியப்பிரான்.pdf/58

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46 என் ஆசிரியப்பிரான்

எதிர்பாராதபடி ஆசிரியப் பெருமான் தம்மைப் பார்க்க வந்தது அவருக்கு மிகவும் மகிழ்ச்சியை உண்டாக்கியது. நீங்கள் வருவ தற்கு நான் எவ்வளவோ புண்ணியம் செய்திருக்கிறேன்' என்று தம் மகிழ்ச்சியை வெளியிட்டார்.

சிறிது நேரம் rேமசமாசாரங்களைப் பேசிக்கொண்டிருந்து விட்டு ஆசிரியர் தாம் வந்த காரியத்தை எடுத்துச் சொல்லத் தொடங்கினர்.

'தங்கள் பெயர் குருமூர்த்தி; குருமூர்த்தி என்றவுடன் எனக்கு என் ஆசிரியப் பெருமான் நினைவுதான் வந்தது. அவர் ஒருசமயம் தம் சம்பந்தி குருசாமி என்பவரைத் திருவாவடுதுறை ஆதீனகர்த்த ராகிய பூரீலபூரீ சுப்பிரமணிய தேசிகருக்கு அறிமுகப்படுத்தி வைத் தார். அப்போது மிகவும் நயமாகப் பேசுகின்ற சுப்பிரமணிய தேசிகர், குருசாமியைப் பார்த்து, நீரும் குருசாமி, நாமும் குருசாமி என்று சொன்னர்.

என்னுடைய குருசாமியாகிய பிள்ளையவர்கள் மிகவும் சாந்த மூர்த்தி. உங்களுடைய பெயரைக் கேட்டவுடன் என்னுடைய ஆசிரியப் பெருமான் நினைவு எனக்கு வந்தது. இயல்பாகச் சாந்த மாக இருக்கிற நீங்கள் சினம் உண்டாவதற்கான நிகழ்ச்சி நடந் தாலும் அதைப் பொறுத்துக்கொள்வதையும் அறிவேன். என்னு டைய உறவினகிைய கிருஷ்ணன் ஏதோ தவருகத் தங்களிடம் நடந்துகொண்டு விட்டாளும். இளமைத் துடிப்பில் அப்படி நடந்து கொண்டுவிட்டு, வீட்டிற்கு வந்து மிகவும் வருந்துகிருன். சாப்பிடவே இல்லை. இரவு முழுவதும் தூக்கமும் இல்லை. இனிமேல் அவ்வாறு தங்களிடம் அவன் நடந்து கொள்ளக்கூடாது என்று கண்டித்து

வைத்தேன்.

குற்றம் செய்தால் தண்டிப்பது நியாயந்தான். அவன் இளமைத் துடிப்பில் இப்படிச் செய்துவிட்டு இப்போது வருந்து கிருன். இனி இப்படி நடந்துகொள்ளமாட்டான் என்று நிச்சய மாக நம்புகிறேன். ஆறுவது சினம் என்று ஒளவைப் பிராட்டி சொல்லியிருக்கிருள். தங்களுக்குச் சினம் வந்தாலும் அது ஆறிவிடும் என்று உணர்ந்தேன். அதல்ைதான் நானே தங்களிடம் வந்தேன்' என்று சொன்னர்.

ஆசிரியப் பெருமானே நேரில் வந்து அன்போடு தம்முடன் பேசியதைக் கேட்டு மகிழ்ந்த சப் ஜட்ஜுக்கு இருந்த கோபம் எல்லாம் மறைந்துவிட்டது. நான் எல்லாவற்றையும் மறந்து விட்டேன். நீங்கள் அதைப்பற்றிக் கவலைப்படவேண்டாம்'