பக்கம்:என் ஆசிரியப்பிரான்.pdf/59

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அயல் காட்டு அன்பர்கள் 47

என்று சொல்லியனுப்பினர். கிருஷ்ணையர் ஆசிரியப் பெருமான் போன பிறகு, என்ன முடிவு ஏற்படுமோ என்ற கவலையுடன் தம் வீட்டில் உட்கார்ந்திருந்தார். சிறிது நேரம் ஆனதல்ை அவருக்கு அந்தக் கவலை மிகுதியாயிற்று. ஆசிரியர் சப் ஜட்ஜின் வீட்டி லிருந்து திரும்பி வந்தவுடன், ‘இனி இப்படி நடந்துகொள்ளக் கூடாது' என்று அறிவுறுத்தினர்.

இப்படி எத்தனையோ சந்தர்ப்பங்களில், கோபம் அடைந்தவர்

களேச் சாந்தப்படுத்தியும், பிறருடைய இடையூறுகள்ேத் தீர்த்தும், பகை உள்ளவர்களைச் சமாதானப்படுத்தி இணைத்தும் ஆசிரியர் உதவி

செய்த நிகழ்ச்சிகள் பலப்பல.

டங்கன் செய்த உதவி

அந்தக் காலத்தில் அரசாங்கக் கல்லூரியில் பெரும்பாலும் ஆங்கிலேயர்களே முதல்வர்களாக இருந்தார்கள். கும்பகோணம் கல்லூரியில் எச். வி. டங்கன் (H. V. Duncan) என்பவர் முதல்வராக இருந்தார். ஆசிரியர் பழைய நூல்களே ஆராய்ந்து வெளியிட்டு வருவதை அவர் நன்கு அறிந்திருந்தார். தம் கல்லூரியில் இருக்கும் தமிழாசிரியர் ஒருவர் உலகப் புகழ்பெற்றதை அறிந்து அவருக்கே பெருமை உண்டாயிற்று. ஒரு நாள் ஆசிரியப்பெருமான் விட்டிற்குச் செல்ல வேண்டுமென்ற எண்ணம் அவருக்கு ஏற்பட்டது. அவர் அதை ஆசிரியரிடம் தெரிவித்தபோது, அப்படியே செய்யலாம் என்று ஒரு நாளைக் குறிப்பிட்டார்.

ஆங்கிலேயராக இருக்கிற ஒருவர் இப்படிச் சாமான்யமாக எல்லோர் வீட்டிற்கும் வருவது இல்லே. ஆனலும் டங்கன் துரைக்கு ஆசிரியப் பெருமானுடைய நூல் தொகுப்புக்களேக் காணவேண்டு மென்ற ஆசை அதிகமாக இருந்தது.

குறிப்பிட்ட நாளில் அவர் ஆசிரியர் இல்லத்திற்கு வந்தார். ஆசிரியர் தாம் சேகரித்து வைத்திருந்த சுவடிகளை எல்லாம் எடுத்துக் காட்டினர். பார்ப்பதற்கு அழகாக இல்லாமல் இருந்த சுவடிகளை எல்லாம் பார்த்து, அவற்றை எவ்வளவு அழகான நூல்களாக வெளிக் கொண்டு வந்திருக்கிருர் என்பதை நினைந்து அவர் வியந் தார். அந்த ஏட்டுச் சுவடியில் இருந்த எழுத்துக்கள் எதுவும் அவருக்கு விளங்கவில்லை.

'இது என்ன எழுத்து?’ என்று கேட்டார். இது தமிழ்தான். அந்தக் காலத்தில் எழுதியது. இதைப் படிப்பதற்குப் பயிற்சி வேண்டும்' என்று ஆசிரியர் சொன்னர்.

'இதை உங்களால் எளிதில் படிக்க முடியுமா?’ என்று ஆசிரியரிடம் கேட்டார். ஆசிரியர் ஒரு பகுதியைப் படித்துக் காட்டினர். - - * -