பக்கம்:என் ஆசிரியப்பிரான்.pdf/60

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48 என் ஆசிரியப்பிரான்

'நீங்கள் இந்த ஆராய்ச்சியிலே ஈடுபட்டிருக்கிறீர்களே, உங்களுக்கு யாராவது பண உதவி செய்கிருர்களா? உங்களுக்கு. உதவி செய்வதற்கு எத்தனை பேர் இருக்கிருர்கள்?’ என்று கேட்டார்.

"ஆண்டவன் திருவருளே நம்பித்தான் நான் இந்தப் பணியைச் செய்துகொண்டிருக்கிறேன். என் சம்பளத்தை வைத்துக் கொண்டு. நான் இதைச் செய்ய முடியுமா?' என்று ஆசிரியர் சொன்னர்.

அதன்பிறகு டங்கன் துரையின் சிபாரிசின் பேரில் ஆசிரியருக்குப் பரீட்சாதிகாரி வேலை சில சமயங்களில் கிடைத்தது. அதனல் கிடைத்த வருவாயை அவருடைய பதிப்பு வேலைக்குப் பயன்படுத்திக் கொண்டார்.

திருவாவடுதுறைக் കേtഞഖ

திருவாவடுதுறை சம்பந்தமான செய்திகளை எல்லாம் மிகவும் ஆர்வத்துடன் சேகரிப்பதில் ஆசிரியருக்கு ஊக்கம் இருந்தது. தம் பேச்சில் அந்த ஆதீனத்தைப் பற்றிச் சொல்லாமல் இருக்க மாட்டார். அந்த ஊருக்கு ஒரு புராணம் உண்டு. அதை வெளியிட வேண்டுமென்ற ஆசை ஆசிரியருக்கு இருந்தாலும், அதற்கு அதிக காலம் செலவாகும் என்பதை அறிந்து அதனை மேற்கொள்ளவில்லை. ஐங்குறுநூறு முதலிய சங்க நூல்களின் ஆராய்ச்சியிலுைம் வேறு பல நூல்களின் ஆராய்ச்சியிலுைம் அவருக்குப் போதிய ஒய்வு கிடைக்கவில்லை. இருந்தாலும் திருவாவடுதுறை சம்பந்தமான ஏதாவது ஒரு நூலை அச்சிட வேண்டுமென்ற ஆர்வம் இருந்தது.

தொட்டிக்கலைச் சுப்பிரமணிய முனிவர் இயற்றிய திருவாவடு,

துறைக் கோவை என்று ஒரு நூல் இருந்தது. அதை ஆராய்ந்து பதிப்பிக்க ஆசிரியர் நினைத்தார். -

அப்போது திருவாவடுதுறை ஆதீனத்தில் 17-ஆவது பட்டத்தில் இருந்த அம்பலவாண தேசிகர் அதனை அறிந்து மிகவும். மகிழ்ந்து, பொருளுதவி செய்தார். அந்த நூல் சென்னை வைஜயந்தி அச்சுக்கூடத்தில் அச்சிடப் பெற்று, 1903-ஆம் ஆண்டு. வெளி வந்தது. திருவாவடுதுறைப் புராணத்தை வெளியிட இயலாவிட்டாலும் இந்த நூலேயேனும் வெளியிட்டதனல் ஆசிரியருக்கு மிகவும் மகிழ்ச்சி உண்டாயிற்று.

ஐங்குறுநூற்றின் முதல் பதிப்பு 1903-ஆம் வருஷம் ஜூன் மாதம் வெளியாயிற்று. அதற்குரிய பொருளுதவியைப் பேரா சிரியர் சுந்தரராமையர் வழங்கினர். தம் நன்றிக்கு அறிகுறியாக ஆசிரியர் தமக்கு வேலை வாங்கித் தந்த தியாகராஜ செட்டியாருக்கு அந்த நூற்பதிப்பை உரிமையாக்கினர்.