பக்கம்:என் ஆசிரியப்பிரான்.pdf/61

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9. சென்னை வாசம் தொடக்கம்

சென்னை செல்வதை ஏற்றுக்கொண்டது

1903-ஆம் வருஷம் கோடை விடுமுறையில் சென்னை மாநிலக் கல்லூரியில் தமிழாசிரியராக இருந்த பூரீநிவாசாசாரியார் நோய்வாய்ப்பட்டுச் சில மாதங்கள் வேலைக்குச் செல்லாமல் ஒய்வு எடுத்துக் கொண்டார். அப்போது வை. மு. சடகோபராமா னுஜாசாரியார் என்பவரைத் தமிழாசிரியராக அப்பதவியில் அமர்த் தினர்கள்.

நோய்வாய்ப்பட்ட ரீநிவாசாசாரியார் காலமாகி விட்டார். எனவே, அந்த இடத்தில் பணியாற்றி வந்த சடகோபராமா னுஜாசாரியார் தமக்கே அந்த வேலை நிலையாகக் கிடைக்கும் என்று எண்ணியிருந்தார்.

அந்தக் காலத்தில் ஆசிரியப் பெருமான் . பதிற்றுப்பத்தை ஆராய்ச்சி செய்து வந்தார். அதைப் பதிப்பிக்க வேண்டுமென்று எண்ணி அதற்குரிய ஏற்பாடுகளைச் செய்யச் சென்னைக்கு வந்தார். மணிமேகலைக்கு வேண்டிய செய்திகளைச் சேகரித்துக் கொடுத்த மளுர் ரங்காசாரியார் என்ற பேராசிரியரையும், வேறு சில நண்பர் களையும் பார்த்துவிட்டுக் கும்பகோணத்திற்குத் திரும்பினர்.

ஒரு நாள் கல்லூரியில் முதல்வராக இருந்த ஜே. எம். ஹென்ஸ்மென் என்பவர் ஆசிரியர் இல்லத்திற்கு வந்தார். அவர் யாழ்ப்பாணக்காரர். தமிழில் மிக்க அன்பு உடையவர். அவர் ஆசிரியரிடம் ஒரு செய்தியைச் சொன்னர், கல்வித் துறைத் தலைவர், ஆசிரியர் அவர்களைச் சென்னை மாநிலக் கல்லூரிக்கு மாற்றி யிருப்பதாகவும், அவருக்குப் பதிலாக வேறு யாரை நியமிக்கலாம் என்று தம்மிடம் கேட்டிருப்பதாகவும் சொன்னர்.

கும்பகோணத்தில் பலகாலம் இருந்த பழக்கத்தாலும், அடிக்கடி திருவாவடுதுறை சென்று ஆதீனகர்த்தருடன் சல்லாபம் செய்து வரும் சந்தர்ப்பம் இருந்ததாலும் ஆசிரியருக்குக் கும்பகோணத்தை விட்டுச் செல்ல முன்பே வாய்ப்புக் கிடைத்தும் போகவில்லை.

ஆலுைம் ஹென்ஸ்மென் அவர்கள், நீங்கள், சென்னைக்குச் சென்ருல் உங்கள் தமிழ்நூல் பதிப்பு வேலைகளுக்குப் பல உதவிகள்

3605—4