பக்கம்:என் ஆசிரியப்பிரான்.pdf/62

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50 என் ஆசிரியப்பிரான்

கிடைக்கும். அடிக்கடி இங்கிருந்து சென்று, சென்னை அச்சகங்களில் புத்தகங்களைப் பதிப்பிப்பதைவிட, அங்கே இருந்தே ஒவ்வொரு நாளும் திருத்தங்களேச் செய்து பதிப்பிக்கலாம். அது மட்டுமன்றி, அங்கே எத்தனையோ பெரியவர்களும், அறிஞர்களும் இருக்கிருர்கள். அவர்களுடைய பழக்கமும் உங்களுக்கு ஏற்படும். உங்கள் புகழும் பரவும்' என்று விரிவாக எடுத்துச் சொல்லி, ஆசிரியரைச் சென்னைக்குச் செல்லச் சம்மதிக்கும்படி செய்தார். தம் பதிப்பு வேலைகளுக்கு உதவியாக இருக்கும் என்ற எண்ணமே மேலோங்கி நின்றதால் ஆசிரியர் அதற்கு உடன்பட்டார். -

ஆசிரியப் பெருமான் கும்பகோணத்தை விட்டுச் சென்னைக்குச் செல்லப் போகிருர் என்ற செய்தி மெல்ல மெல்ல நகரம் முழுவதும் பரவியது. கடந்த 23 ஆண்டுகளாகக் கும்பகோணம் கல்லூரியில் இருந்த ஆசிரியரை விட்டுப் பிரிவதற்கு அந்த நகரப் பெருமக்களுக்கு மனம் இல்லை. என்ருலும் அவர் நல்லதோர் இடத்திற்குப் போய்ச் சேருகிருர் என்பதை அறிந்து ஒருவாறு மகிழ்ந்தார்கள்.

இந்தச் செய்தி திருவாவடுதுறை ஆதீனகர்த்தருக்கும் தெரிந்தது. அவருக்கு வருத்தம் உண்டாக வில்லை. சென்னைக்குச் சென்ருல் ஆசிரியருக்குப் பல நலங்கள் கிடைக்கும் என்றும் தம் ஆதீனத்தின் புகழை அங்கும் பரப்புவார் என்றும் வேண்டும் பொழுது சென்னையிலிருந்து வரச்செய்யலாம் என்றும் எண்ணினர். ஆசிரியர் ஆதீனத்திற்குச் சென்றபோது, அப்போது அதன் தலைவராக இருந்த பூரீலழரீ அம்பலவாண தேசிகர் உயர்ந்த சால்வை ஒன்றை ஆசிரியருக்குப் போர்த்தி, நீங்கள் இந்த ராஜ தானியின் தலைநகராகிய சென்னைக்குப் போவதனால் பல செல்வர் க்ளின் பழக்கம் உங்களுக்கு ஏற்படும். நம்முடைய ஆதீனத்தின் பெருமையைச் சென்னையில் நீங்கள் பரப்புவீர்கள். அதல்ை நீங்கள் சென்னைக்குப் போவது எல்லா வகையிலும் நல்லது” என்று தம்முடைய மகிழ்ச்சியைத் தெரிவித்தார்.

ஆசிரியப் பெருமான் ஒரு நல்ல நாள் பார்த்துச் சென்னைக்குப் புறப்பட்டார்.

சென்னை வருகை சென்னைக்கு வந்த ஆசிரியர் தம்முடைய தம்பி இருந்த திருவேட்டீசுவரன் பேட்டையில் உள்ள வீட்டுக்குச் சென்று

தங்கினர். மாநிலக் கல்லூரிக்குச் சென்று வேலையை ஒப்புக் கொண்டார்.