பக்கம்:என் ஆசிரியப்பிரான்.pdf/63

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சென்னை வ்ாசம் தொட்க்கம் 5t.

அந்தக் காலத்தில் மாநிலக் கல்லூரியின் முதல்வராக இருந்தவர் பில்டர்பெக் துரை என்பவர். அவர் முதலில் கும்பகோணம் கல்லூரியில் முதல்வராக இருந்தவர். ஆதலின் ஆசிரியப் பெருமானுக்கு அவருடைய பழக்கம் முன்பே இருந்தது.

அந்தக் காலத்தில் கல்லூரியில் தமிழ் வகுப்புக்களுக்கு அவ்வளவு சிறப்புத் தருவது இல்லை. சென்னை மாநிலக் கல்லூரியில் இருந்த தமிழ் வகுப்பும் அப்படித்தான் இருந்தது. கும்பகோணம் கல்லூரியில் தமிழ் வகுப்பில் உயர்ந்த மேடையும், நல்ல மேசை, யும் நாற்காலியும் இருந்தன. ஆனல் சென்னை மாநிலக் கல்லூரியிலோ அந்த அமைப்புகள் எல்லாம் அப்போது இல்லை. ஏதோ ஒரு பழைய மேசை மட்டும் இருந்தது.

ஒரு நாள் ஆசிரியர் முதல்வரைக் கண்டார். கும்பகோணத் துக்கும் சென்னைக்கும் வேறுபாடு தெரிகிறதா?’ என்று முதல்வர் கேட்டார். இங்கே எல்லாம் சிறப்பாக இருக்கின்றன. இந்தக் கல்லூரி எவ்வளவு பழையதென்பதை நான் பழகும் மேசை காட்டுகிறது' என்று சொல்லிச் சற்றே நிறுத்தினர். .

'நீங்கள் சொல்வது எனக்கு விளங்கவில்லையே!' என்று முதல்வர் சொன்னர். எனக்குக் கிடைத்திருக்கும் நாற்காலியும் மேசையும் பல காலம் கண்டவை. மேசையில் அங்கங்கே குழிகள் உள்ளன. அவை அந்த மேசையின் பழமையைக் காட்டுகின்றன, பொருட்காட்சிச் சாலையில் வைப்பதற்கு ஏற்ற அரிய பண்டங்கள் அவை’ என்று ஆசிரியர் சொன்னர்.

அதைக் கேட்ட முதல்வர் சிரித்துவிட்டார்; உண்மையை உணர்ந்து கொண்டார். அப்பால் உயர்ந்த மேடையும், பீரோவும். நல்ல் நாற்காலி மேசையும் அந்த வகுப்பறையில் அமைக்க ஏற்பாடு செய்தார். .

தம் குடும்பத்தை விட்டுச் சில காலம் தனியாகச் சென்னையில் இருந்த ஆசிரியர், அந்த ஆண்டு கோடைக்கால விடுமுறைக்குக் கும்பகோணம் சென்று தம்முடைய குடும்பத்தையும் சென்னைக்கு அழைத்து வந்தார் முதலில் பெரிய தெருவில் ஒர் இல்லத்தில் குடியிருக்க எண்ணினர். ஆனல் அந்த வீடு கிடைக்கவில்லை.

பிறகு திருவேட்டீசுவரன் பேட்டையில் பிள்ளையார் கோவில் தெருவில் மாதம் 20 ரூபாய் வாடகையில் ஒரு வீட்டை ஏற்பாடு செய்து கொண்டார். இந்த வீட்டிற்கு 1904-ஆம் வருஷம் ஜனவரி மாதம் குடி வந்தார். பிள்ளையார் கோவில் தெரு என்று அந்தத் தெருவுக்குப் பெயர் அமைந்திருப்பதே ஆசிரியப் பெருமானுக்கு