பக்கம்:என் ஆசிரியப்பிரான்.pdf/64

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52 என் ஆசிரியப்பிரான்

நல்ல சகுனமாகத் தோன்றியது. கணபதி மந்திரத்தைப் பல முறை ஜபித்து வந்தவர் அவர்.

திருவல்லிக்கேணியில் ஒரு பகுதி திருவேட்டீசுவரன் பேட்டை. இறைவன் வேடுவகை வந்து அருச்சுனனுடைய வில்லால் அடிபட்ட தாகப் பாரதம் சொல்கிறது. இறைவன் வேடுவகை வந்ததை நினைப்பிப்பது திருவேட்டீசுவரர் என்னும் திருநாமம். அருச்சுனனல் அடிபட்ட தழும்பைக் குறிக்கும் சுவடு லிங்கத்தின் திருமுடியில் இருக்கும். அதனால் அதனைப் பார்த்தப் பிரகர லிங்கம் என்று வடமொழியில் கூறுவார்கள்.

அந்தக் காலத்தில் ந்யூயிங்டன் பங்களா என்ற இடத்தில் ஜமீன்தார்களின் பிள்ளைகளுக்காக ஒரு பள்ளிக்கூடம் நிறுவியிருந் தார்கள். ஆசிரியருடைய முயற்சியால் திருமானூர்க் கிருஷ்ணையர் தமிழாசிரியராக அங்கே வேலை பார்க்கத் தொடங்கினர். அதனல் ஆசிரியப் பெருமானுடன் இருந்து பல உதவிகளைச் செய்வதற்குரிய வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது.

ஆசிரியர் பதிற்றுப்பத்தை ஆராய்ச்சி செய்து பல குறிப்புக் களுடன் சென்னை வைஜயந்தி அச்சுக் கூடத்தில் பதிப்பிக்கத் தொடங்கினர். .

எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று பதிற்றுப்பத்து என்பது. பத்துச் சேர மன்னர்களைப் பாராட்டி ஒவ்வொருவருக்கும் பத்துப் பாட்டாக வெவ்வேறு புலவர் பாடியது அது. அதன் முதற் பத்தும் கடைசிப் பத்தும் கிடைக்கவில்லை. முற்றும் கிடைத்தபிறகு பதிப்பிக்க லாம் என்று எண்ணியிருந்த ஆசிரியர், எங்குத் தேடியும் அந்தப்பகுதி கள் கிடைக்காமையால் கிடைத்தவற்றை மட்டும் பதிப்பித்தார்.

ஆசிரியர் ஏட்டுச் சுவடிகளிலிருந்து கையால் எழுதிய புத்த கங்கள் பலவற்றைத் தொகுத்து வைத்திருந்தார். அப்படியே பதிற்றுப்பத்துக்கும் செய்திருந்தார். அந்த நூல் 1904-ஆம் வருஷம் ஜூன் மாதம் வெளியாயிற்று.

மணி ஐயர் செய்த அருஞ்செயல்

மயிலாப்பூரில் 13-1-1905-இல் பென்னத்துர் சுப்பிரமணிய ஐயர் உயர்நிலைப் பள்ளியைத் (பி. எஸ். ஹைஸ்கூல்) தொடங்கினர்கள். சங்கராந்தி தினத்தன்று அதன் திறப்புவிழா நடைபெற்றது. உயர்நீதி மன்றத்தில் நீதிபதியாக இருந்த மணி ஐயர் (ஸர் எஸ். சுப்பிரமணிய ஐயர்) அந்த 'விழாவுக்குத் தலைமை