பக்கம்:என் ஆசிரியப்பிரான்.pdf/65

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சென்னை வாசம் தொடக்கம் 53

தாங்கினர். அவருக்கு ஒரு வரவேற்புப் பத்திரம் வாசித்தளிக்க வேண்டுமென்று ஆசிரியரை நிருவாகிகள் கேட்டுக் கொண்டார்கள். அவ்வாறே ஆசிரியரும் செய்யுள் வடிவில் ஒரு வரவேற்புப் பத்திரம் எழுதிக் கொண்டு, விழாவிற்குச் சென்ருர். அங்கே பெருங் கூட்டம். உள்ளேயும், வெளியிலேயும். மக்கள் நெருக்கிக்கொண்டு நின்று கொண்டிருந்தார்கள். கூட்டம் மிக அதிகமாகவும் நெருக்கமாகவும் இருந்தமையினல் ஆசிரியரால் விழா மேடைக்குச் செல்ல முடியாமல் இருந்தது. விழாத் தலைவராக மேடையில் அமர்ந்திருந்த மணி ஐயர் அவர்கள், ஆசிரியர் உள்ளே வர முடியாது தவிப்பதைப் பார்த்து விட்டார். உடனே யாரேனும் ஒருவரை அனுப்பி ஆசிரியரை மேடைக்கு அழைத்துவரச் சொல்லியிருக்கலாம். ஆனல் அவர் செய்த காரியம் மிகச் சிறப்பாக இருந்தது. அங்கே இருந்த படியே, ஐயர்வாள், வரவேணும், வரவேணும்!” என உரத்த குரலில் ஆசிரியரை வரவேற்ருர்.

அடுத்த கணம் எல்லோரும் வெளிப்புறமாகத் திரும்பிப் பார்த்தார்கள். ஆசிரியப் பெருமான் வருவதைக் கண்டு தாங்களாகவே விலகி ஒதுங்கிக்கொண்டு அவர் விழா மேடையைப் போய் அடைவதற்கு வழி விட்டார்கள். மணி ஐயர் வேறு யாரையேனும் ஆசிரியரை உள்ளே அழைத்து வர அனுப்பியிருந் தால்கூட ஆசிரியரால் அவ்வளவு எளிதாக உள்ளே போயிருக்க முடியாது. ஆனல் விழாத் தலைவரே அப்படி அழைத்ததனால், எல்லோரும் ஆசிரியருக்கு மதிப்புக் கொடுத்து வழிவிடவே,ஆசிரியப் பெருமான் மேடைக்குச் சென்ருர். அங்கே தமிழின் பெருமையைப் பற்றியும், கல்வியின் சிறப்பைப்பற்றியும் ஒரு மணி நேரத்திற்கு மேலாக விரிவாகப் பேசினர். அதைக் கேட்டுப் பலரும் உவகை அடைந்தார்கள்.

இந்த நிகழ்ச்சியைப் பற்றிப் பிற்காலத்தில் ஆசிரியர் சொல்ல நேர்ந்த பொழுது, அவமதிப்பும் ஆன்ற மதிப்பும், மிகைமக்க ளால் மதிக்கற் பால என்பதை அன்று நான் நன்கு உணர்ந்தேன். மணி ஐயரவர்கள் அப்படிச் செய்யாவிட்டால் நான் கூட்டத்தில் நசுக்குண்டு என் கடமையைச் செய்ய முடியாமல் வீட்டிற்குத் திரும்பிப் போயிருக்க வேண்டியதுதான்' என்று சொன்னர்.

சென்னையில் பல சங்கீத சபைகள் உண்டு.அவ்விடங்களில் அடிக்கடி இசை நிகழ்ச்சிகளும் கதாகாலட்சேபங்களும் நிகழும்.இப்போதைப் போலச் சினிமா வளர்ச்சி பெருத ஊமைச் சினிமாவாக இருந்ததனால் அத்தகைய கச்சேரிகளுக்கும் காலrேபங்களுக்கும் மக்கள் திரள்திரளாகக் கூடுவார்கள். அத்தகைய நிகழ்ச்சிகளுக்கு