பக்கம்:என் ஆசிரியப்பிரான்.pdf/66

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54 என் ஆசிரியப்பிரான்

ஒருவரைத் தலைமை வகிக்கச் செய்து நிகழ்ச்சி நடத்தியவரை இறுதியில் பாராட்டும் வழக்கம் அப்போது இருந்து வந்தது. ஆசிரியப்பிரான் சென்னைக்கு வந்த பிறகு இத்தகைய நிகழ்ச்சிகள் பலவற்றில் கலந்து கொள்ள நேர்ந்தது. எல்லாச் சபையினரும் ஆசிரியரை அழைப்பார்கள். பொழுது விடிந்தால் இதே வேலை யாக இருந்தால் தம் தமிழ்ப்பணிக்கு இடையூறு நேருமென் றெண்ணிச் சில முக்கியமான நிகழ்ச்சிகளுக்கு மட்டும் போய்ச் சிறப்பித்துவிட்டு வருவார். அப்படியே இலக்கியக் கூட்டங்களுக்கும் போய் வருவார்.

ஆசிரியப்பிரானுடைய பாராட்டுப் பெற்றவர்கள் பலர். மாங்குடி சிதம்பர பாகவதர், பிடாரம் கி ரு ஷ் ண ப் பா, பாலக்காடு அனந்தராம பாகவதர், பழனி சுப்பிரமணிய பாகவதர், திருப்பழனம் பஞ்சாபகேச சாஸ்திரிகள், முத்தையா பாகவதர் முதலியவர்களுடைய நிகழ்ச்சிகள் பலவற்றில் ஆசிரியர் கலந்து கொண்டு அவ்வப்போது உசிதமாகப் பாராட்டுரை பகர்ந்தார்.

அன்னையார் மறைவு

1905-ஆம் ஆண்டு ஆரம்பத்தில் ஆசிரியப் பெருமானுடைய அன்னையார் சரஸ்வதி அம்மாள் நோய்வாய்ப்பட்டு 24-3-1905இல் சிவபதம் அடைந்தார்கள். சரஸ்வதியினுடைய பிள்ளை என்று சிறப்பாகப் போற்றப் பெறும் வகையில் ஆசிரியரைச் செய் தவர் அந்தப் பெருமாட்டியார். உத்தமதானபுரத்திலிருந்து வேத வித்தகர்கள் வந்து எல்லாக் காரியங்களேயும் நடத்திக் கொடுத்தார்கள்.

அப்போது அரசில் பெரிய உத்தியோகத்தில் இருந்த திவான் பகதூர் சீநிவாச ஐயங்கார் அவர் வீட்டிற்குத் துக்கம் கேட்க வந்திருந்தார். அவர் பல ஆண்டுகள் பச்சையப்பன் கல்லூரி அறக் கட்டளைக் குழுவில் தலைவராக இருந்தார். ஜனவிநோதினி என்ற பத்திரிகையையும் மகாராணி என்ற பத்திரிகையையும் நடத்தி வந்தார். சென்னைப் பல்கலைக் கழகத்தில் திராவிட மொழிக் குழுவின் தலைவராக அவர் இருந்தார்.

அவர் ஆசிரியர் இல்லத்துக்கு வந்தபோது ஆசிரியர் அவரை வரவேற்ருர். துக்கம் விசாரித்தார். அந்தச் சமயம் பேச்சோடு பேச்சாக மணிமேகலைக்கதைச் சுருக்கத்தை எம்.ஏ. வகுப்புக்குப்பாட மாக வைக்க ஏற்பாடு செய்திருப்பதைச் சொல்லி, இதல்ை வருகிற பணம் மாதுர் கைங்கர்யத்திற்கு இருக்கட்டும்' என்று சொன்னர். 'இறைவன் திருவருள் எப்படி எப்படியோ வந்து நமக்கு உதவி செய்கிறது, என்று ஆசிரியப்பிரான் எண்ணங்கொண்டார்.