பக்கம்:என் ஆசிரியப்பிரான்.pdf/67

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சென்னை வாசம் தொடக்கம் 55

மாணவர் துடுக்கை அடக்கியது

சென்னை மாநிலக் கல்லூரிக்கு ஆசிரியர் வந்த புதிது. இங்கே மாணவர்களில் சிலர் அடக்கமின்றி நடந்து வந்தார்கள். ஒரு சமயம் வகுப்பின் கடைசி வரிசையில் இருந்த ஒரு மாணவர் பாடத்தைக் கவனிக்காமல் ஏதோ கிறுக்கிக் கொண்டிருந்தார்.

ஆசிரியர் மேடையிலிருந்து இறங்கி அந்த மாணவர் அருகில் சென்று, பாடத்தைக் கவனிக்காமல் ஏதோ கிறுக்கிக் கொண்டிருக் கிருயே!' என்று கேட்டார்.

உடனே அந்தப் பையன் துடுக்காக, 'இங்கே நாங்கள் விரும்பிய தைச் செய்வோம். இது கும்பகோணம் அல்ல” என்று சொன்னன். ஆசிரியருக்கு வருத்தமுண்டாகி விட்டது. உடனே ஒன்றும் சொல்ல வில்லை. இரண்டு மூன்று நாட்களாயின. மீண்டும் ஒரு நாள் ஆசிரியர் பாடம் நடத்திக் கொண்டிருந்த போது அவனக் கவனித்தார். அந்தப் பையன் கால்மேல் கால்போட்டுக் கொண்டு உட்கார்ந்திருந்தான். அதைக் கவனித்த ஆசிரியர் பாடம் சொல்லிக் கொண்டிருந்தபோதே ஒரு கதையைச் சொல்லத் தொடங்கினர்.

'இராவணனுக்கு முன் அனுமானக் கொண்டு வந்தார்கள். இராவணன் சிம்மாசனத்தில் உட்கார்ந்திருந்தான். அந்த அவையில் அனுமானுக்கு உட்கார அவன் இடம் கொடுக்கவில்லை. உடனே அனுமான் தன் வாலே நீட்டிச் சுருட்டிச் சுருட்டிப் பெரிய சிம்மாசனம் போல அமைத்து, அதன்மேல் உட்கார்ந்து கொண்டு கால்மேல் கால் போட்டுக் கொண்டான். அவன் உட்கார்ந்திருந்தது எப்படி இருந்தது தெரியுமா? அதோ அவர் உட்கார்ந்திருக்கிருரே, அது மாதிரி இருந்தது' என்று அந்தப் பையனைக் சுட்டிக்காட்டினர். ,

உடனே எல்லா மாணவர்களும் அந்தத் துடுக்கு மாணவன் பக்கம் திரும் பிப் பார்த்துக் கொல் என்று சிரித்தார்கள். அந்த மாணவனுக்கே மிகவும் வெட்கமாகி விட்டது.

உடனே ஆசிரியர், சரியான சமயத்தில் எனக்கு உதாரணம் காட்டுவதற்கு ஏற்றபடி நடந்து கொண்டாய்; மிக்க நன்றி' என்று சொல்லி மேலே பாடத்தைத் தொடங்கினர்.

அது முதல் அந்தப் பையன் மிகவும் அடங்கியவகை மாறி விட்டான். "

  • இத்தகைய பல நிகழ்ச்சிகளை ஆசிரியர் தாம் எழுதிய 'மாளுக்கர் விளையாட்டுக்கள்’ என்ற கட்டுரையில் எழுதியிருக் கிறார். -