பக்கம்:என் ஆசிரியப்பிரான்.pdf/68

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10. சென்னை வாழ்க்கை உறுதியானது கண்டனத்தைப் புறக்கணித்தல்

ஆசிரியப் பெருமானது வகுப்பில் இருந்த சில மாணவர்களைச் சில பேர்கள் தூண்டிவிட்டு ஆசிரியர் பாடம் சொல்லும்போது பல விதமான தடைகளை உண்டாக்கும்படி செய்வார்கள்.

ஒரு சமயம் யாரோ ஒருவர் ஒரு துண்டுப் பத்திரிகையை வெளி யிட்டிருந்தார். அதில், நச்சிஞர்க்கினியர் தவறு செய்தார்; சங்கராசாரியார் தவறு செய்தார்; உ. வே. சாமிநாதையரும் பிழை களைச் செய்திருக்கிருர்' என்று அச்சிட்டிருந்தது.

ஒரு மாணவன் மிகவும் வருத்தத்தோடு அந்தத் துண்டுப் பத்திரிகையை ஆசிரியரிடம் கொண்டு வந்து காட்டின்ை.

அதில் இருப்பதைப் பார்த்தவுடன் ஆசிரியப் பெருமான் கோபம் கொள்ளவில்லை; வருத்தம் அடையவில்லை. புன்னகை பூத்த முகத்துடன், இந்த எளியேனே அவ்வளவு உயரத்திற்கா ஏற்றி விட்டார்கள்? சங்கராசாரியாருடனும், நச்சினர்க்கினியருட னும் சமமாக என்னை வைத்தல்லவா சொல்லியிருக்கிருர்கள்?' என்ற வுடன், மிகவும் வருத்தத்துடன் அந்தத் துண்டுப் பத்திரிகையைக் கொண்டு வந்த மாணவனே வருத்தம் மாறிச் சிரித்து விட்டான்.

மற்ருெரு சமயம், ஆசிரியரைப் பற்றிய கண்டனத் தாள் ஒன்றை ஒரு மாணுக்கன் ஆசிரியரிடம் காட்டி வெளிப்படையாகத் து.ாஷிப்பதையும் காட்டி மிகவும் வருந்தினன். ஆசிரியரோ சிறிதும் கோபம் கொள்ளாமல், இதை எழுதியவர் என் தாயைவிடப் பெரியவர்” என்ருர். மாளுக்கர் ஒன்றும் விளங்காமல் ஆசிரியர் முகத்தைப் பார்த்தார். 'என் தாய் என் மலத்தைக் கையால் தான் எடுப்பார். இவர்களோ தம் நாவால் எடுக்கிருர்கள்' என்ருர்,

ஆசிரியப் பெருமான் பாடம் சொல்லும்போது இடையிடையே ஒரு மாணவன் அடிக்கடி கேள்விகள் கேட்டுக் கொண்டிருந்தான். பாடத்திற்கும் அந்தக் கேள்விகளுக்கும் ஒரு சம்பந்தமும் இராது. என்ருலும் ஆசிரியர் பொறுமையாக அவன் கேட்கும் கேள்வி களுக்குச் சில காலம் விடையளித்து வந்தார்.