பக்கம்:என் ஆசிரியப்பிரான்.pdf/69

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சென்னை வாழ்க்கை உறுதியானது 57

அந்த மாணவன் வேண்டுமென்றே இப்படிக் குறும்பாகப் பல கேள்விகளைக் கேட்கிருன் என்றும், வேறு யாரோ ஒருவரது தூண்டு தலினுல்தான் அப்படிக் கேட்கிருன் என்றும் ஆசிரியர் உணர்ந்தார்.

ஒரு நாள் அந்தப் பையன் வழக்கம்போலக் கேள்வி கேட்டவுடன் அதற்குப் பதில் சொல்லிவிட்டு ஆசிரியர் பேசலானர். "நான் இங்கே பாடம் சொல்ல வந்திருக்கிறேன். பாடத்திற்குச் சம்பந்தப் பட்ட கேள்வி கேட்டால் நான் பதில் சொல்லக் கடமைப்பட்டிருக் கிறேன். பாடத்திற்குச் சம்பந்தம் இல்லாத கேள்விகளைக் கேட்ப தற்கோ, அவற்றுக்கு நான் பதிலளிப்பதற்கோ இது நேரம் அன்று. இதிலே பொழுதைப் போக்கிவிட்டால், சொல்லிக் கொடுக்க வேண்டிய பாடம் நின்றுவிடும். உங்கள் கேள்விகளுக்கு விடை தெரிந்துகொள்ள வேண்டுமென்ற ஆர்வம் இருந்தால் என் வீட்டிற்கு வந்து கேளுங்கள்; பதில் சொல்கிறேன்” என்று சொன்னதோடு, 'இந்தக் கேள்விகளை நீயாகக் கேட்கவில்லை என்று நிச்சயமாகத் தெரியும். நீ கேட்கும் கேள்விகள் வேறு நூல்களில் இருப்பவை. வேறு யாரோ தூண்டிவிட்டு உன்னைக் கேட்கச் சொல்லியிருக்கிருர்கள் என்பதை நான் நன்ருகத் தெரிந்துகொண் டிருக்கிறேன்' என்று சொன்னவுடன் அந்தப் பையனுக்கு நடுக்கம் உண்டாகிவிட்டது. அதுமுதல் அவன் கேள்வி கேட்பதை நிறுத்திக்கொண்டான்.

கும்பகோணத்துக்கு மாற்றம் ஆகாமை

ஆசிரியர் கும்பகோணத்தில் வேலை பார்த்து வந்தபோது அங்கே மிடில் மாஸ்ட் என்பவர் முதல்வராக இருந்தவர். பிறகு அவர் சென்னை மாநிலக் கல்லூரிக்குக் கணித ஆசிரியராக வந்தார். அதன் பிறகு அவர் கல்வித்துறையில்துணை இயக்குநராக ஆளுர்,

1904-ஆம் ஆண்டு இறுதியில் ஒரு நாள் மிடில்மாஸ்ட் தம்மை வந்து பார்க்கும்படியாக ஆசிரியருக்குச் சொல்லி அனுப்பினர். ஆசிரியர் அவரைப் பார்க்கச் சென்றபோது, 'உங்களைக் கும்ப கோணத்திற்கு மறுபடியும் மாற்றலாம். நீங்கள் அதற்குச் சித்தமாக இருங்கள்” என்று தெரிவித்தார்.

எதிர்பாராத இந்தச் செய்தியைக் கேட்ட ஆசிரியருக்கு மனம் குழம்பியது. ஒன்றும் பேசத் தோன்றலில்லை. இதுவும் ஆண்டவன் சோதனை போலும்! என்று எண்ணித் தம் இல்லத்திற்குத் திரும்பி விட்டார்.

பதிப்பு வேலையும், ஆராய்ச்சியும் சென்னையிலே மிகவும் சிறப்பாக நடந்துவந்த நேரம் அது. மறுபடியும் கும்பகோணத்