பக்கம்:என் ஆசிரியப்பிரான்.pdf/7

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முன்னுரை

தமிழ்நாட்டில் முன் காலத்தில் தமிழ்ப்புலவர் என்று சொல்லிக் கொண்டு எங்கே போனலும், கம்பராமாயணத்திலிருந்து ஒரு பாட்டைச் சொல்லி விளக்குங்கள்' என்று சொல்வார்கள். எல்லா நூல்களிலும் பழமையானதும் சிறந்ததும் கம்பராமாயணம் என்ற எண்ணம் அந்தக் காலத்தில் எல்லோருக்கும் இருந்து வந்தது. தமிழ் கற்கத் தொடங்குபவர்கள் முதலில் நைடதத்தைப் பாடம் கேட்பார்கள். "நைடதம் புலவர்க்கு ஒளடதம்' என்ற பழமொழி கூட எழுந்தது.

அந்தக் காலத்தில் இப்பொழுதை விடத் தமிழை ஆழமாகப் படித்தவர்கள் இருந்தனர். புலவர்கள் வீட்டில் பலபல ஏட்டுச் சுவடிகள் இருந்தன. ஓர் ஏட்டுச் சுவடி பழையதாகப் போய் விட் டால் அதைப் பிரதி பண்ணி வைத்துக் கொண்டு மூல ஏட்டை நெய்யில் தோய்த்து ஆகுதி பண்ணி விடுவார்கள்; அல்லது ஆற்றில் விட்டு விட்டார்கள். துரதிஷ்டவசமாகப் பிற்காலத்தில் மூலத்தைப் பிரதி பண்ணும் வழக்கம் போய் ஏடுகளே ஆற்றில் விட்டு விடும் பழக்கம் வந்து விட்டது. அதனல் எத்தனையோ நூல்கள் அழிந்து போய் விட்டன.

மகாமகோபாத்தியாய டாக்டர் உ. வே. சாமிநாதையரவர்கள் திருவாவடுதுறை மடத்தில் பூரீ மீனட்சி சுந்தரம்பிள்ளையவர் களிடம் தமிழ் பயின்ற போது விளையாபதி ஏட்டுச் சுவடியைப் பார்த்திருக்கிருர்களாம். அவர்கள் பதிப்பு வேலையைத் தொடங்கி நடத்தி வரும் காலத்தில் அந்தச் சுவடி கிடைக்கவில்லை. வேருேரி டத்தில், இன்னரிடம் தகடுர் யாத்திரை இருக்கிறது’ என்ற குறிப்பு இருந்ததாம். அதைத் தேடும் போது அதுவும் கிடைக்கவில்ல்ை.

தமிழ் ஏட்டுச் சுவடிகளும் புலவர்களும் மிகுதியாக இருந்த காலத்தில் பழைய நூல்களைப் பதிப்பிக்கும் துணிவு யாருக்கும் இல்லை. யாழ்ப்பாணம் பூரீல பூர் ஆறுமுக நாவலரவர்கள் சில பிற் கால நூல்களைப் பதிப்பித்திருக்கிரு.ர். r

சேலம் இராமசுவாமி முதலியார் என்பவரின் துரண்டுதலால் ஐயரவர்கள் சீவகசிந்தாமணியைப் படிக்கத் தொடங்கினர்கள். அதில் ஆழ்ந்து பிறகு அதைப் பதிப்பிக்கும் வாய்ப்பும் கிடைத்தது. அது தொடங்கிப் பத்துப்பாட்டு, மணிமேகலை, ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து, பரிபாடல், புறநானூறு, வேறு பல பிரபந்தங்கள் ஆகியவற்றைப் பதிப்பித்துத் தமிழ் நாட்டுக்கு வழங்கினர்கள்.

மூலே முடுக்குகளிளெல்லாம் சென்று ஏடுகளைத் தேடி எடுத்து வந்து ஆராய்ந்து தம்முடைய மதிநுட்பத்தால் பொருள் உணர்ந்து பதிப்பித்து வழங்கினர்கள் அவர்கள். திருவாவடுதுறை ஆதீனத்தாரின் பரிந்துரையின் மேல் பல புலவர் வீடுகளில் ஏடு தேடும் முயற்சிக்குத் துணை கிடைத்தது. அவ்வாறு தேடி எடுத்த