பக்கம்:என் ஆசிரியப்பிரான்.pdf/70

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58 என் ஆசிரியப் பிரான்

திற்குப் போனுல் இந்த அனுகூலங்கள் எல்லாம் அங்கே கிடைப்பது அரிதாயிற்றே என்று ஆசிரியருக்குக் கவலை உண்டாயிற்று. என்ன செய்வது என்று தெரியவில்லை.

அப்போது ஆசிரியருடைய நண்பராகிய ஆர். வி. சீநிவாசையர் பதிவுத்துறைத் தலைவராக இருந்தார். அவரிடம் சென்று மிடில்மாஸ்ட் தம்மிடம் சொன்னதைத் தெரிவித்ததோடு, *கும்பகோணம் போவதற்கு எனக்கு வேறு எந்த விதமான தடையும் இல்லை. இங்கே என்னுடைய பதிப்பு வேலைகளுக்கு எவ்வளவோ அனுகூலங்கள் இருக்கின்றன. அங்கே நான் திரும்பவும் போவதனல் இந்தப் பதிப்பு வேலைகளுக்கும், பழைய நூல்களின் ஆராய்ச்சிப் பணிக்கும் தடங்கல் உண்டாகுமே என்றுதான் வருந்து கிறேன்’ என்று தெரிவித்தார்.

அப்போது சீநிவாசையர் வேறு ஒன்றும் சொல்லவில்லை. "மிடில்மாஸ்ட் துரை தமக்கும் மேலே வேறு ஒர் அதிகாரி இருப் பதைத் தெரிந்து கொள்ளவில்லை போலும்!” என்ருர்.

'இதைக் கவனித்துக்கொள்ளும் பொறுப்பு என்னுடையது. நீங்கள் இதுபற்றிச் சிறிதும் கவலை கொள்ள வேண்டாம். எவ்விதச் சோர்வும் இல்லாமல் உங்கள் வேலையைப் பாருங்கள்’ என்று. ஆறுதலளித்து ஆசிரியரை அனுப்பிவைத்தார்.

அப்போது கல்வித்துறையின் தலைவராக இருந்தவர் போர்ன் துரை. அவர் உதகமண்டலத்திற்குச் சென்றிருந்தார். சீநிவாசையர் அங்கே சென்று அவரைக் கண்டு பேசினர். ஐயர் அவர்கள் தாமாக விரும்பிச் சென்னைக்கு வரவில்லை. நாங்கள் எல்லோருமாகச் சேர்ந்து அவரை இங்கே வருவித்தோம். அவருடைய ஆராய்ச்சிப் பணிகளும், பதிப்பு வேலைகளும் இங்கே நன்முக நடைபெறுகின்றன. அவர் செய்யும் ஆராய்ச்சி அவருக்கு மாத்திரம் நன்மை உண்டாக்கும் என்பது இல்லே, அவை தமிழ் உலகத்திற்கே பெரும் உபகாரமாக இருக்கின்றன. அவருடைய புகழ் உலகம் முழுவதும் பரவியிருக்கிறது. வெளிநாட்டில் அவர் நண்பர்கள் பலர் இருக் கிருர்கள். அத்தகைய அவருக்கு எத்தனையோ வகைகளில் நாம் உதவி செய்தாக வேண்டும் அல்லவா?’ என்று எப்படிச் சொல்ல வேண்டுமோ அப்படிச் சொன்னுர்.

அதைக் கேட்டுக் கல்வித்துறை அதிகாரி சென்னையிலிருந்து ஆசிரியப்பெருமான மாற்றவே கூடாது என்பதற்கு வேண்டிய ஏற்பாடுகளைச் செய்துவிட்டார்.