பக்கம்:என் ஆசிரியப்பிரான்.pdf/71

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சென்னை வாழ்க்கை உறுதியானது 59.

அரசினர் உதவி

ஆசிரியர் வெளியிடும் நூல்கள் தமிழின் பெருமையையும் பழங் காலத்தில் இருந்த தமிழர்களின் நாகரிகத்தையும் அறிந்து பலரும் வியந்து பாராட்டினர்கள். கல்வித்துறையில் தலைவர்களாக இருந்த வர்களுக்கும் ஆசிரியருடைய உழைப்பின் பயனும் அவருடைய கல்வித் திறமையும் நன்ருகப் புலப்பட்டன. அதனல் அவர்கள் ஆசிரியரைப்பற்றிய பரிந்துரையை அரசினருக்கு எழுதுவது வழக்கம். அதன் பயனகச் சென்னை அரசினர் ஆசிரியரின் புத்தக ஆராய்ச்சிச் செலவுக்கு ஆயிரம் ரூபாய் வழங்குவதாகத், தீர்மானித்து வழங்கினர்கள். அதற்குரிய உத்தரவு 1909 ஆகஸ்டு மாதம் 5-ஆம் தேதி கிடைத்தது.

தியாகராச லீலை

திருவாரூரில் எழுந்தருளியிருக்கும் தியாகராசப் பெருமான் செய்த திருவிளையாடல்கள் பல இருக்கின்றன. மதுரை மாநகரில் சொக்கநாதர் 64 வீலைகள் செய்தார். ஆளுல் திருவாரூர்த். தியாகராசரோ 360 லீலைகள் செய்ததாகப் புராணம் சொல்கிறது. அந்த லீலைகளைப்பற்றிய வடமொழிப் புராணம் ஒன்று உண்டு.

திரிசிரபுரம் மீட்ைசிசுந்தரம் பிள்ளையவர்கள் அந்த நூலைத் தமிழில் மொழி பெயர்க்க வேண்டுமென்று அவாவினர். மூலநூல் முற்றும் கிடைக்கக்கூடும் என்ற எண்ணத்தில் நாட்டுப் படலம், நகரப் படலம் முதலியவற்றை மிக விரிவாக அந்தக் கவிஞர் அமைத்தார். ஆனல் மூல நூல் முற்றும் கிடைக்கவில்லை. கிடைத்த சிலவற்றைக்கொண்டு 14 விலைகளை இயற்றினர். -

ஆசிரியப் பெருமான் பிள்ளையவர்களிடம் பாடம் கேட்ட காலத்தில் அந்த நூலே நன்கு பாடம் கேட்டு இன்புற்றிருந்தார். பிள்ளையவர்கள் சொல்வச் சொல்ல அந்த நூலே எழுதியவர் தியாகராச செட்டியார். முற்றுப் பெருத நூல் என்ருலும் அது சுவை மிக்கதாக இருந்தமையினல் அதை அச்சிட வேண்டுமென்ற எண்ணம் ஆசிரியருக்கு உண்டாயிற்று.

து.ாத்துக்குடிச் செல்வர் ரா. மா. மே. சி. தா. சிதம்பரம் செட்டியார் அவர்கள் வேண்டிய உதவி செய்வதாகச் சொல்லி நூலைப் பதிப்பிக்கும்படி வற்புறுத்தினர். அவ்வாறே 1905-ஆம் ஆண்டு அந்த நூல் பதிப்பிக்கப் பெற்றது.

ஆசிரியப்பிரான் மிகவும் அருமையான சங்க நூல்களைப் பதிப்பித்திருக்கிரு.ர். தியாகராச லீலையோ பிற்காலப் புலவர்