பக்கம்:என் ஆசிரியப்பிரான்.pdf/73

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

11. மகாமகோபாத்தியாயப் பட்டம் பெற்றது

1906-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் தேதி பிறந்தது. அரசினர் இந்த நாட்டிலுள்ள பல மக்களுக்குப் பல பட்டங்களை வழங்கி ஊக்கம்அளிக்கும் நாள் அது.

அன்று காலையில் சி. வி. கங்காதர சாஸ்திரிகள் ஆசிரியப் பெருமானை வந்து கண்டார். எங்களுக்கு எல்லாம் அளவில்லாத, மகிழ்ச்சி. எல்லோரும் ஆனந்தத்தால் குதிக்கிருேம்' என்ருர்,

ஆசிரியப் பெருமானுக்கு ஒன்றும் விளங்கவில்லை. உங்களுக்கு. மகாமகோபாத்தியாயப்பட்டம் கிடைத்ததைப் பற்றிக் கொண் டாடுகிறேன். அந்தச் செய்தி இன்னமும் உங்களுக்குத் தெரியாதா? தெரிந்திருக்க வேண்டுமே!’ என்று கேட்டார் சாஸ்திரிகள். ஆசிரியருக்கு அந்தச் செய்தி அப்போதுதான் தெரிந்தது.

அதுமுதல் நேரிலே கண்டு ஆசிரியரைப் பாராட்டியவர்கள் பலர். கடிதங்கள் மூலமாகத் தங்களுடைய மகிழ்ச்சியைத் தெரி வித்துக் கொண்டவர்கள் மிகமிகப் பலர்.

உயர்நீதிமன்றத்தில் நீதிபதியாக இருந்த மணி ஐயர், மகா மகோபாத்தியாயப் பட்டம் தங்களுக்கு வழங்கப்பட்டதைக் கண்டு. மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். அது தங்களுக்கு வரும் என்று எனக்குத் தெரியும்' என ஒரு கடிதம் அனுப்பினர். அவருடைய முயற்சியினால்தான் ஆசிரியருக்கு அந்தப் பட்டம் கிடைத்தது. என்பது அதனல் தெரிய வந்தது. -

பத்திரிகைகள் எல்லாம் ஆசிரியருக்கு அந்தப் பட்டம் கொடுத்தது பற்றி மிகமிகப் பாராட்டி எழுதின. பலர். செய்யுட்களாலேயே பாராட்டி எழுதினர்கள். எல்லோருக்கும். ஆசிரியர் ஒரு பதிலே அனுப்பினர். அது வருமாறு:

தாங்கள் அன்புடன் எழுதிய பத்திரிகை வரப்பெற்றுத் தாங்கள் வைத்திருக்கும் உள்ளன்பின் மிகுதியை உணர்ந்தேன்.

'குறிப்பிட்ட பெயரை வகிப்பதற்கு ஒருசிறிதும் ஆற்றல் இல்லேனனதால் அச்செய்தி தெரிந்த நிமிஷம் முதல் மிக்க