பக்கம்:என் ஆசிரியப்பிரான்.pdf/74

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாணமும், அச்சமும் உடையேனகிய யான் தங்களுக்கும் தங்கள் போன்றவர்களுக்கும் இதன் நிமித்தம் உண்டாகும் உண்மையான மனமகிழ்ச்சியை நோக்கி ஒருவாறு ஆறுதலுற்று வருகிறேன்.

பாஷையிலுள்ள பல கலைகளிலும் அதிநிபுணர்களாகிய பண்டிதர்கள் பெற்று வந்த இப்பெயரைச் சிறியேனுக்கு அளித்தது தங்கத்திற்கும் இரும்பிற்கும் பொன் என்ற பெயரை இட்டிருப்பது, போலும்.

ஆட்டுவித்தா லாரொருவராடாதாரே? சர்வேசுவரனுடைய திருவருளும் தங்களுடைய மெய்யன்பும் வேண்டிய தமிழ்ப் பயிற்சியை இனி உண்டு பண்ணுவதன்றி இனிச் செய்யவெண்ணி யிருக்கும் நூலாராய்ச்சிகளைக் கவலையின்றிச் செய்வித்து, அறிவிக்க வேண்டியவற்றை எனக்கு அறிவித்துப் பாதுகாத்து நிறைவேற்று மென்று எப்பொழுதும் திருவருளேச் சிந்தித்துக் கொண்டு வருகிறேன்...

"அவனன்றி யோரணுவும் அசையாது என்பது உண்மை யன்றே?"

பலவிடங்களில் ஆசிரியப் பெருமான் இந்தப்பட்டம் பெற்றதற் காகப் பாராட்டு விழா நடத்தினர்கள். அந்நாள்வரை வடமொழி வல்லுநர்களுக்கே அந்தப் பட்டம் கிடைத்து வந்தது. இப்போது ஆசிரியருக்கு அளித்த இந்தப் பட்டம், அரசினர் தமிழையே கெளரவித்தது ஆகும் என்று பலர் பாராட்டி எழுதினர்கள்.

வேல்ஸ் இளவரசர் வருகை

1906-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் வேல்ஸ் இளவரசரும், அவர் தேவியாரும் சென்னைக்கு விஜயம் செய்தார்கள். ஒரு வாரத்திற்குமேல் கவர்னரது மாளிகையில் தங்கியிருந்தார்கள். அந்தச் சமயத்தில் அவர்களைப் பாராட்டிக் கெளரவிப்பதற்காகச் சென்னை நகரே விழாக்கோலம் கொண்டிருந்தது. பலவிடங்களில் கொண்டாட்டங்கள் நடந்தன. வெளியூர்களிலிருந்தும் சிற்றுார்களிலிருந்தும் ஜமீன்தார்களும், செல்வர்களும், மற்றவர்களும் வந்து சேர்ந்தார்கள். பல அரிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன. அப்போது கவர்னர் மாளிகையில் ஒரு தர்பார் நடந்தது.

அதற்கு முன்பு சென்னையில் இந்தியர்கள் வசித்து வந்த பகுதியை ப்ளாக்டவுன் என்று ஆங்கிலேயர் வழங்கி வந்தார்கள். அது பலருடைய உள்ளத்தைப் புண்படுத்தி வந்தது. ஜார்ஜ்