பக்கம்:என் ஆசிரியப்பிரான்.pdf/75

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மகாமகோபாத்தியாயப் பட்டம் பெற்றது 63

இளவரசர் வந்ததையொட்டி, அதற்கு ஜார்ஜ் டவுன் என்று பெயரை மாற்றி வழங்கலானர்கள். - - :

வேல்ஸ் இளவரசர் வரவையொட்டி அறிஞர் பெருமக்களுக்குப் பலவகையான பட்டங்களும், சம்மானமும் அளிக்கப் பெற்றன. அப்போது ஆசிரியப் பெருமானுக்குத் தங்கத் தோடா அணிவித்து மதிப்புச் செய்தார்கள். -

பாரதியார் பாடல்கள்

1905-ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் 17-ஆம் தேதி சென்னை மாநிலக் கல்லூரியில் தமிழ்ச் சங்கத்தில் ஆசிரியப் பெருமான் மகா மகோபாத்தியாயப் பட்டம் பெற்றதைப் பாராட்ட ஒரு கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்திற்குப் பாரதியார் வந்திருந்தார்.

இந்நிகழ்ச்சி பற்றிச் சென்னை மாநிலக் கல்லூரித் தமிழ் மாணவர்கள் சங்க 1905-6-ஆம் ஆண்டு அறிக்கைப் பத்திரத்தில்

பின்வருமாறு குறிக்கப் பெற்றுள்ளது.

‘எங்கள் ஆசிரியரும், இச்சங்கத் தலைவருமாகிய மகா-பூரீ-புரீ வே. சாமிநாதையரவர்கள் இராசாங்கத்தாரால் மகாமகோ பாத்தியாயாப் பட்டம் சூட்டப்பட்ட விஷயத்தைக் குறித்துக் கொண்டாடுவதற்குச் சென்னைச் சர்வகலாசாலை அங்கத்தினர்களில் ஒருவராகிய மகா-ழரீ-பூர். ஜே. எம். வேலுப்பிள்ளை அவர்களுடைய அக்கிராசனத்தின் கீழ் இவ்வருஷம் மார்ச்சு மாதம் 17-ஆம் தேதி ஒரு முறை கூடியது. அப்போது மயிலாப்பூர், பி. எஸ். ஹைஸ்கூல் தமிழ்ப் பண்டிதர் மகா-யூரீபூர் இ.வை. அனந்தராமையர் அவர்களும் சுதேசமித்திரன் உதவிப் பத்திராதிபர் ஆகிய மகா-ழரீ.யூரீ சுப்பிர மணியபாரதியார் அவர்களும் மற்றும் சிலரும் பாடல்களே நூதன மாக இயற்றிப் படித்தார்கள்.'

இதிலிருந்து மகாகவி சுப்பிரமணிய பாரதியார் அக்காலத்தில் சுதேசமித்திரன் பத்திரிகையில் உதவி ஆசிரியராகப் பணியாற்றி வந்தார் என்பது தெரிகிறது.

அப்போது பாரதியார் மூன்று பாடல்களை எழுதி வாசித்தார். அந்த மூன்று பாடல்களையும் அங்கேயே ஒரு தாளில் பென்சிலால் எழுதினர். அந்தப் பாடல்கள் வருமாறு:

1. செம்பரிதி ஒளிபெற்ருன்; பைங்கறவு

சுவைபெற்றுத் திகழ்ந்தது; ஆங்கண் உம்பரெலாம் இறவாமை பெற்றனரென்று

எவரேகொல் உவத்தல் செய்வார் ?