பக்கம்:என் ஆசிரியப்பிரான்.pdf/76

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64 என் ஆசிரியப்பிரான்

கும்பமுனி எனத்தோன்றும் சாமிநா

தப்புலவன் குறைவில் கீர்த்தி

பம்பலுறப் பெற்றனனேல், இதற்கென்கொல்

பேருவகை படைக்கின்றீரே?

2. அன்னியர்கள், தமிழ்ச்செவ்வி அறியாதார்

இன்றெம்மை ஆள்வோ ரேனும்,

பன்னியசீர் மகாமகோ பாத்தியா

யப்பதவி பரிவின் ஈந்து,

பொன்னிலவு குடந்தைங்கர்ச் சாமிநா தன்றனக்குப் புகழ்செய் வாரேல்,

முன் இவன்அப் பாண்டியர்நாள் இருந்திருப்பின்

இவன்பெருமை மொழிய லாமோ?

3. நிதியறியோம், இவ்வுலகத் தொருகோடி

இன்பவகை கித்தம் துய்க்கும் -

கதியறியோம்' என்றுமணம் வருந்தற்க:

குடந்தைங்கர்க் கலைஞர் கோவே !

பொதியமலைப் பிறந்தமொழி வாழ்வறியும் காலமெலாம் புலவோர் வாயில்

துதியறிவாய்; அவர்நெஞ்சின் வாழ்த்தறிவாய்;

இறப்பின்றித் துலங்கு வாயே.

ഒഖ് புலவர்கள் ஏதேனும் காரணத்தால் வெளிப்படையாகப் புகழாமல் இருந்தாலும் அவர்கள் உள்ளம்வாழ்த்தும்’ என்ற கருத்து இக்காலத்தில் எவ்வளவு உண்மையானதென்று விளங்குகிறது.

ஆசிரியப்பெருமான் சென்னைக்கு வந்தபிறகு, அவரிடம் தம்முடைய பிள்ளைகளுக்குத் தனியாகப் பாடம் சொல்லும்படி ஏற்பாடு செய்ய வேண்டுமென்று சூனம்பேட்டை ஜமீன்தார் போன்ற சில செல்வர்கள் விரும்பினர்கள். அதற்குத் தக்க ஊதியம் கிடைக்கும் என்பதையும் தெரிவித்தார்கள். முன்பு சிலர் பாடபுத்தகங்களை எழுதச்சொன்னதுபோல இருந்தது இந்த, யோசனை. -

ஆசிரியருக்கோ பண்டைத் தமிழ்நூல் ஆராய்ச்சியிலும், பதிப்பிலும் இருந்து வந்த உள்ளம் வேறு எதிலும் ஈடுபாடு: கொள்ளவில்லை.

கல்லூரியில் மாணவர்களுக்குப் பாடம் நடத்துவார். தமக்கு உதவி செய்கிறவர்களுக்கு மட்டும் தம் வீட்டில் தமிழ் நூல்களைப்