பக்கம்:என் ஆசிரியப்பிரான்.pdf/77

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மகாமகோபாத்தியாயப் فساثالا பெற்றது 65

பாடம் சொல்லி வந்தார். ஊதியம் கருதிச் செல்வர்களின் விட்டிற்குச் சென்று அவர்கள் பிள்ளைகளுக்குப் பாடம் சொல்லும் வழக்கத்தை அவர் மேற்கொண்டிருந்தால் ஒருகால் நிறையப் பொருளே ஈட்டியிருக்கலாம். அதனல் அவர் விரும்பியபடி பண்டைத் தமிழ் நூல்களே ஆராய்ச்சி செய்யப் போதிய அவகாசம் அவருக்குக் கிடைக்காமல் போயிருக்கும். எனவே, பொருளைக் கருதி அத்தகைய வேலைகளை மேற்கொள்ளாமல் மறுத்துவிட்டார்.

அர்பத்நட் வங்கி முறிவு

அந்தக் காலத்தில் அர்பத்நட் வங்கி என்ற பெரிய நிறுவனம் சென்னையில் மிகப் புகழ்பெற்று விளங்கியது. 1906-ஆம் ஆண்டு அது திடீரென்று வீழ்ச்சியுற்றது. அதில் பணம் போட்டிருந்த பல பேர்கள் தம் பொருளை இழந்து துயரத்திற்கு ஆளானர்கள். பல குடும்பங்கள் ஆயிரக்கணக்கில் அதில் பணம் போட்டிருந்தமையால், அது முறிந்த பிறகு அவல நிலைக்கு வந்துவிட்டனர். பலர் சித்த சுவாதீனம் இழந்தனர். குறைந்த வருமானம் உடையவர்கள் சிலர் தாம் சம்பாதித்தது அனைத்தையும் தங்கள் எதிர்காலம் கருதி அதில் போட்டிருந்ததனல், அது முறிந்தவுடன் உயிரையே விட்டு

விட்டார்கள்.

அந்தக் காலத்தில் தம்பு செட்டித் தெருவில் ரிப்பன் புத்தக சாலை என்ற ஒரு புத்தக வெளியீட்டு நிலையம் இருந்தது. அதில் ஆசிரியப் பெருமான் பதிப்பித்த நூல்களேயும் விற்பனை செய்து வந்தார்கள். விற்பனையாகும் புத்தகங்களின் கணக்கை மூன்று மாதத்திற்கு ஒரு முறையோ, ஆறு மாதத்திற்கு ஒரு முறையோ, அவற்றுக்குரிய விலையைச் செக் காக வைத்து அனுப்புவது வழக்கம். அர்பத்நட் கம்பெனி முறிந்து போவதற்கு ஒரு வாரத் திற்கு முன்தான் ரூ. 125-க்கு அர்பத்நட் கம்பெனிக் செச்கை ரிப்டன் புத்தகசாலை நிறுவனத்தார் ஆசிரியருக்கு அனுப்பி வைத்தார்கள்.

இரண்டு நாள் கழித்துத் திருவல்லிக்கேணியில் இருந்த அர்பன் கோவிாபரேடிவ் சொசைடிக்கு ஆசிரியப் பெருமானுடைய குமாரர் திரு கல்யாணசுந்தரையர் சென்று வீட்டிற்கு வேண்டிய சாமான்களை எல்லாம் வாங்கிகொண்டு, அதற்கு அந்தச் செக்கை அவர்களிடம் கொடுத்துவிட்டு, மிச்சப் பணத்தைப் பெற்றுக் கொண்டு வந்துவிட்டார். z

& அர்பத்நட் கம்பெனி ஒரு வாரத்திற்குள் முறிந்துவிட்டது. அந்தக் கூட்டுறவுச் சங்கத்தில் வேலை பார்த்து வந்த ஒருவர்

2604–5 .