பக்கம்:என் ஆசிரியப்பிரான்.pdf/78

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66 - என் ஆசிரியப்பிரான்

ஆசிரியப் பெருமானிடம் வந்து, நீங்கள் கொடுத்த செக்கை மாற்ற முடியவில்லை. செக்கிற்குப் பணம் கொடுங்கள். இல்லையாளுல் பிறகு தருவதாகவாவது எழுதிக் கொடுங்கள். இந்தக் செக்கிற் குரிய பணத்தை நீங்கள் ரிப்பன் புத்தகசாலை நிறுவனத்தாரிட மிருந்தே பெற்றுக் கொள்ளலாம் எனத் தெரிவித்தார்.

ஆசிரியரும் அந்தச் செக்கைப் புத்தகசாலை உரிமையாளரிடமே கொடுத்து, அதற்குரிய பணத்தைப் பெற்று வரச் சொன்னர், ஆனல் அர்பத்நட் கம்பெனியில் பணத்தைப் போட்டு இழந்தவர் களில் ரிப்பன் புத்தக வெளியீட்டாரும் ஒருவர் ஆதலால், அவர் மிகவும் வருத்தத்துடன், அது எப்படி முடியும்? முன்பே நான் செக் கொடுத்தவுடன் நீங்கள் அதனைப் பணமாக மாற்றிக் கொண்டிருக் கலாம். அப்படி மாற்ருமல் பல நாட்கள் வைத்திருந்தது உங்கள்

குறைதான்' என்று சொல்லி விட்டார்.

திருவல்லிக்கேணி அர்பன் கூட்டுறவுச் சங்கத்தைத் தொடங்கி யவர்களில் ஆசிரியரும் ஒருவர். பல பேர் அந்தச் சங்கத்திற்கு இப்படிச் செக்குகளைக் கொடுத்திருந்தார்கள். எனவே இதுபற்றி யோசித்து முடிவு செய்ய வேண்டுமென்று அந்தச் சங்கத்திற்கு ஒரு கடிதம் எழுதி அனுப்பினர்.

அவர்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை. சில நாள்கள் கழித்து ஆசிரியர் அந்தச் செக்குக்குரிய பணத்தை அந்தச் சங்கத் திற்குக் கொடுத்துவிட்டார். தாமதம் காரணமாக இப்படி நேர்ந்ததே! என்று அவர் எண்ணவில்லை. பாங்கு முறிந்ததளுல் எவ்வளவு குடும்பங்கள் அவல நிலையை அடைந்திருக்கும் என்றே எண்ணி இரங்கினர்.

ஜி. யு. போப்

ஆக்ஸ்பர்டு பல்கலைக் கழகத்தில் தமிழாசிரியராக இருந்த ஜி. யு. போப் அவர்கள் அடிக்கடி ஆசிரியருக்குக் கடிதம் எழுதுவார். ஆசிரியர் பதிப்பித்திருந்த புறநானூற்றை மிகவும் அழுத்தமாகப் படித்தார். 9-10-1906 அன்று அவர் எழுதிய கடிதத்தில், கதாங்கள் அனுப்பிய புறநானூற்றை மூன்ரும் தடவையாக இப்போது வாசித்துக் கொண்டிருக்கிறேன். அவற்றில் உள்ள பல அரிய பகுதிகளே ஏற்கெனவே இங்கிலீஷில் மொழி பெயர்த்து விட்டேன். மணிமேகலையையும் முழுதும் ஊன்றிப் படித்து மொழி பெயர்த்தும் ஆயிற்று. தங்களுடன் பல மணிநேரம் உட்கார்ந்து நேரில் தமிழைப் பற்றிப் பேச விரும்புகிறேன். தங்களைத்தான்