பக்கம்:என் ஆசிரியப்பிரான்.pdf/79

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மகாமகோபாத்தியாயப் பட்டம் பெற்றது 67

நான் என்றும் என் தமிழ்க்குருவாகக் கொண்டுள்ளேன்' என்று எழுதியிருக்கிரு.ர்.

அவர் பல் நூல்களைத் தமிழிலிருந்து ஆங்கிலத்தில் மொழி பெயர்த்திருக்கிரு.ர். அவற்றில் சிலவே வந்தனவன்றி யாவும் வெளிவரவில்லை. அது தமிழர்களின் துரதிருஷ்டம் என்றுதான் சொல்லவேண்டும்.

ஜி. யு. போப்புக்கும் ஆசிரியப் பெருமானுக்கும் இருந்த தொடர்பை என் சரித்திரத் தில் காணலாம்.

தலைப்பில்லாத பேச்சு

1906-ஆம் வருஷம் அக்டோபர் மாதம் 13-ஆம் தேதி அன்று சென்னை மாநிலக் கல்லூரியில் தமிழ் மாணவர்களின் சங்கத்து ஆண்டு விழா நடக்க ஏற்பாடாகி இருந்தது. அதற்கு வந்து தலைமை தாங்க வேண்டுமென்று பாண்டித்துரைத் தேவருக்கு ஆசிரியர் எழுதியிருந்தார். அவரும் விழாவுக்கு இரண்டு நாட்கள் முன்பே சென்னைக்கு வந்துவிட்டார். அவர் சென்னைக்கு வந்ததைப் பயன்படுத்திக்கொண்டு பலவிடங்களில் அவரது பேச்சை அன்பர்கள் அமைக்க எண்ணினர். ஆசிரியப் பிரானிடம் தம் கருத்தைச் சொல்லி அப்படியே அமைத்துக் கொண்டனர்.

மாநிலக் கல்லூரியில் விழா நடப்பதற்கு முதல் நாள் கிறிஸ்துவக் கல்லூரியில் தமிழாசிரியராக இருந்த கோபாலா சாரியார், பாண்டித்துரைத் தேவரைத் தம் கல்லூரிக்கு அழைத்து, நல்ல முறையில் ஒரு வரவேற்பு நடத்தினர். அந்த வரவேற்பில் பலர் பேசினர்கள். ஒவ்வொருவர் பெயருக்கும் எதிரில் இன்ன பொருள் பற்றிப் பேசுவார் என்று நிகழ்ச்சி நிரவில் போடப் பட்டிருந்தது. எனினும் ஆசிரியர் பெயருக்கு எதிரில் பொருள் எதையும் குறிக்காமல் பேசுவார் என்று மட்டும் அச்சிட்டிருந்தது.

அதைக் கண்டு ஆசிரியர் வருத்தப்படவில்லை. பாண்டித்துரைத் தேவருக்கு நடைபெறும் பாராட்டைக் காணவேண்டுமென்ற ஆசையினல் கிறிஸ்துவக் கல்லூரிக்குச் சென்ருர்.

அங்கே பலரும் பேசிய பிறகு ஆசிரியரையும் பேசச் சொன் ஞர்கள். என் பெயரைப் போட்டு, எனக்குப் பேசுவதற்கு என்று எந்தத் தலைப்பையும் இந்த விழா அமைப்பாளர்கள் கொடுக்க வில்லை' என்று சற்றுச் சினத்தோடு ஆசிரியர் பேசக்கூடும் என்று அதனே அமைத்தவர்கள் நினைத்திருக்கக்கூடும். ஆளுல் ஆசிரியர்