பக்கம்:என் ஆசிரியப்பிரான்.pdf/8

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

vi

பழைய நூல்கள் எளிதில் பொருள் உணர முடியாமல் இருந்தன. அந்த நிலை கண்ணைக் கட்டிக் காட்டில் விட்டது போல இருந்தது.

இருப்பினும் ஆண்டவன் திருவருளினாலும் இடைவிடாத முயற்சியினாலும் அவற்றின் பொருளை உணர்ந்து கொண்டார்கள். அவற்றை அழகுறப் பதிப்பித்தார்கள். ஆங்கிலமே தெரியாத அவர்கள் ஆங்கில நூல்களைப் போன்ற முறையில் நூல்களை வெளியிட்டதைக் கண்டு பலரும் வியப்படைந்தார்கள்.

அவர்களுடைய பதிப்பில் முதலில் முன்னுரையில் நூலில் உள்ள பொருள் இன்னது என்பதும், ஏட்டுச் சுவடி கிடைத்த இடங்கள் இன்னவை என்பதும், பதிப்பிக்கும் போது துணையாக இருந்து பணி புரிந்தவர்கள் இன்னார் என்பதும் இருக்கும். பிறகு ஆசிரியர் வரலாறும், அப்பால் நூலைப் பற்றிய ஆராய்ச்சியும் இருக்கும்.

நூற்பதிப்பில் அடிக்குறிப்பில் ஒப்புமைப் பகுதிகளும், உரையாசிரியர்கள் மேற்கோளாகக் காட்டும் அந்த நூற்பகுதி விளக்கமும், பாட பேதங்களும் இருக்கும். நூலின் இறுதியில் அரும் பதம் முதலியவற்றின் அகராதி இருக்கும்.

அவர்கள் பதிப்பித்த ஒரு நூலை ஆழ்ந்து படித்தாலே பல நூல்களைப் படித்த அறிவு உண்டாகும். ஒரு வகையில் தமிழ்க் களஞ்சியமாக அடிக்குறிப்புக்கள் இருக்கும்.

இன்னும் பல நூல்களைப் பதிப்பிக்க வேண்டும் என்ற ஆர்வம் அவர்களுக்கு இறுதி வரையில் இருந்தது. அதுவே அவர்களுடைய உபாசனை. தமிழே அவர்களுடைய மூச்சு. நோய்வாய்ப் பட்டிருந்த போதுகூடத் தமிழ் நூலைப் படிக்கச் சொல்லிக் கேட்டும் பாடம் சொல்லியும் வந்தார்கள். தமிழ் நூல்களை மாணாக்கர்களுக்குப் பாடம் சொல்வதில் அவர்களுக்கு இருந்த ஆர்வம் அளவில் அடங்குவது அன்று. தம் மாணாக்கர்களுக்கு ஏதேனும் நன்மை கிடைத்தால் தமக்குக் கிடைத்ததுபோல மகிழ்ச்சி அடைவார்கள்.

பழைய நூல்களைப் பதிப்பித்த அவர்கள் பிற்காலத்தில் தம் அநுபவங்களையும், ஏடு தேடிய வரலாறுகளையும், புலவர்களின் வரலாறுகளையும் உரை நடையில் எழுதினர்கள். 'கலைமகள்' பத்திரிகையும் பிற பத்திரிகைகளின் சிறப்பு ம்லர்களும் அவர்களுடைய எழுத்தைத் தாங்கிச் சிறப்புப் பெற்றன.

ஐயரவர்கள் தம்முடைய வரலாற்றை எழுத வேண்டுமென்று அடிக்கடி பலர் வற்புறுத்தி வந்தார்கள். அதனால் 6-1-1940 முதல் ஆனந்தவிகடனில் ஒவ்வோர் இதழிலும் தம் வரலாற்றை வெளியிட்டு வந்தார்கள் 1942 ஆம் ஆண்டு மே மாதம் வரையில் இந்தச் சுயசரிதம் வெளியாயிற்று. 1942-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஐயரவர்கள் அமரராகி விட்டார்கள். ஆகவே 122 அத்தியாயங்களோடு வரலாறு நின்று விட்டது. அதிலுள்ள இறுதி வாக்கியம், மேலே ஜங்குறுநூறு, பதிற்றுப்பத்து, அகநானூறு, பெருங்கதை என்பவற்றில் என் கருத்தைச் செலுத்தலானேன்’ என்பது. பெருங்கதை ஆதியும் அந்தமும் இல்லாமல் இருந்தது. இருப்பினும் அதைப் பதிப்பித்தார்கள் பல வடமொழி நூற்