பக்கம்:என் ஆசிரியப்பிரான்.pdf/80

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Ꮾ8 என் ஆசிரியப்பிரான்

அதனே நயமாகப் புலப்படுத்தி, அதைத் தமக்குச் சாதகமாக்கிக் கொண்டு பேசினர்.

'எனக்கு இந்தக் கல்லூரித் தமிழாசிரியர் கோபாலாசாரியார் மிக்க உதவியைச் செய்திருக்கிருர். இன்ன விஷயத்தைப் பற்றிப் பேச வேண்டுமென்று குறிப்பிட்டிருந்தால் அதற்காகச் சில நூல் களைப் பார்த்துச் சித்தம் செய்துகொண்டு வந்திருக்கவேண்டும். ஏதேனும் பேசுவார் என்று போட்டிருப்பதால் நான் என் மனம் போலச் சிலவற்றை உங்கள் மத்தியில் பேசிவிடலாம்.

'இன்றைக்கு விழாத் தலைவராக வீற்றிருக்கும் தேவர் அவர்கள் சென்னைக்கு விஜயம் செய்திருப்பது மிகவும் அரிய விஷயம். அவரது பேச்சைக் கேட்டாலே போதும்; பல அரிய விஷயங்களைத் தெரிந்து கொள்ளலாம். நாளையதினம் மாநிலக் கல்லூரியில் தமிழ் மாணவர் கள் சங்கவிழா நடக்க இருக்கிறது. தேவர் அவர்களே நாளைய தினம் அங்கும் தலைமை வகிக்கிரு.ர். தவருமல் நீங்கள் எல்லோரும் நாளேக்கு அங்கும் வந்திருந்து தேவர் அவர்களது பேச்சைக் கேட்டுப் பயன் அடையவேண்டும்' என்று தம் பேச்சைச் சுருக்கமாக அமைத்துக் கொண்டார். அவையில் உன்ளவர்களுக்கு அந்த விழா அமைப்பாளர்கள் செய்தது நியாயமற்றது என்பது புலகிைவிட்டது.