பக்கம்:என் ஆசிரியப்பிரான்.pdf/81

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12. பாண்டித்துரையின் தொடர்பு மாநிலக் கல்லூரி விழா

1906-ஆம் ஆண்டு அக்டோபர் 13-ஆம் ஆம் தேதி மாநிலக் கல்லூரியில் நடைபெற்ற விழா, பெரிய விழாவாக அமைந்து விட்டது. அந்தக் காலத்தில் மதுரையில் தமிழ்ச் சங்கத்தைத் தொடங்கியவர் பாண்டித்துரைத் தேவர் என்ற செய்தி பரவி யிருந்தது. சேதுபதி அவர்களுக்கு இருந்த பெருமையைக் காட் டிலும் அவருக்கு அதிகமான பெருமை இருந்தது. ஆகையால் மாநிலக் கல்லூரியில் மாணவர்கள் அல்லாமல் வேறு பல செல்வர் களும், புலவர்களும் அந்தக் கூட்டத்திற்கு வந்திருந்தார்கள்.

அந்தக் கூட்டத்தில் கடவுள் வணக்கம் பாடுவதற்காக ஏ. மகா லிங்கையர் என்பவரை ஏற்பாடு செய்திருந்தார்கள். அவர் எட்டையபுரம் மகாராஜாவின் குமாரருக்குப் பாடம் சொல்லி வந்தார். மிகவும் அழகான வடிவம் உடையவர். அவரது சாரீரம் கணிரென்று இருக்கும். அருமையாகப் பாடுவார். அவர் பாடுவதே அந்த விழாவுக்குச் சிறப்பாக இருக்கும் என்ற எண்ணத்தில்ை அவரிடம் முன்கூட்டியே சொல்லியிருந்தார்கள். ஆனல் துரதிருஷ்ட வசமாக அவருக்குத் தொண்டை கட்டிக் கொண்டதல்ை கடைசி நேரத்தில் யாரைக் கொண்டாவது பாடச் சொல்லுங்கள் என்று ஆசிரியருக்குச் சொல்லியனுப்பிவிட்டார்.

ஆசிரியர் சிறிது நேரம் யோசித்தார். திருவாரூர்ப் போர்டு உயர்நிலைப் பள்ளியில் எம். எஸ். சந்தானமையங்கார் என்பவர் தமிழாசிரியராக இருந்தார். அவர் அருமையாகப் பாடுவார். தந்தி கொடுத்து அவரை வரச் செய்து அந்த விழாவில் முதலில் கடவுள் வணக்கம் பாடச் சொன்னர். அவர் தம் இசைத் திறமையைக் காட்டி, இறை வணக்கம் பாடினர். அவையினர் மிகவும் களிப்ப டைந்தார்கள். மகாலிங்கையர் வராத குறையைச் சந்தான மையங்கார் போக்கிவிட்டார்.

பாண்டித்துரைத் தேவரது பேச்சு அன்று மிக்க எடுப்பாக இருந்தது. மாலை 5 மணிக்குத் தொடங்கிய விழா இரவு 8 மணி வரை நடந்தது.