பக்கம்:என் ஆசிரியப்பிரான்.pdf/82

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70 என் ஆசிரியப்பிரான்

ஆசிரியரிடம் யாவருக்கும் உள்ள மதிப்பை அறிந்து அவர் பெருமகிழ்ச்சி அடைந்தார். கும்பகோணத்தைவிடச் சென்னை பெரிய நகரமாயிற்றே.அங்கே கடலில்பெருங்காயத்தைக் கரைத்தது. போல இவருடைய பெருமை ஆகிவிடுமோ?’ என்ற அச்சம் அவருக்கு இருந்தது. ஆனல் இங்கே வந்தபோது ஆசிரியருக்கு முன்னேவிடப் பெரும்புகழும் செல்வாக்கும் இருப்பதை அறிந்து பெருமகிழ்ச்சி அடைந்தார்.

அவர் ஊருக்குச் சென்றவுடன் ஆசிரியருக்குத் தமக்குண்டான பெருமகிழ்ச்சியையும் ஆசிரியர் சென்னையில் கதிரவனைப்போல விளங்குவது பற்றிய இன்பத்தையும் வெளியிட்டு ஒரு கடிதம்

எழுதினர்.

கடனைப் பெருமல் விட்டது

கும்பகோணத்தில் ஆசிரியர் இருந்தபோது சீவக. சிந்தாமணியைப் பதிப்பித்த செய்தி அவருடைய வரலாற்றில் இருக் கிறது. அப்போது சைனமத சம்பந்தமான பல செய்திகளை ஆசிரி யருக்கு வீடுர்ச் சந்திரநாதசெட்டியார் சொன்னர். அவர் கும்ப கோணம் கடைத் தெருவில் மளிகைக் கடை வைத்து வியாபாரம் செய்து வந்தார். அவர் தமக்கு உதவியாக இருந்த ஒருவரை நம்பிக் கடையை ஒப்படைத்திருந்தார். அவர் சந்திரநாத செட்டி யாரை ஏமாற்றிவிட்டார். அதனுல் எதிர்பாராத நஷ்டம் அவருக்கு ஏற்பட்டது. வியாபாரத்தை நிறுத்தும்படியாக நேர்ந்து பின்னர் வறுமையினல் மிகவும் துன்புற்ருர்.

ஆசிரியர் சென்னை வந்த பிறகு, ஒரு நாள் சந்திரநாத செட்டி யாரின் குமாரர் சி. மல்லிநாத செட்டியார் ஆசிரியரின் இல்லத் திற்கு வந்தார். அவர் ஆசிரியரிடம் ஒரு கருத்தைத் தெரிவித்தார். “தாங்கள் இந்த ஊருக்கு வந்த பிறகு தங்களுடைய பதிப்பு நூல்கள் கும்பகோணத்தில் கிடைக்கவில்லை. பலர் என் தந்தையாரிடம் வந்து, *சீவகசிந்தாமணிப் பதிப்பு இருக்கிறதா?’ என்று கேட்கிருர்கள். இல்லையென்ருல், உங்களிடம் இருக்கும் புத்தகத்தையாவது கொடுங்கள். பார்த்துவிட்டுத் தருகிருேம் என்று கெஞ்சுகிருர்கள். நீங்கள் பதிப்பித்துள்ள நூல்கள் சிலவற்றை என்னிடம் கொடுத் தால் நான் அவற்றைக் கும்பகோணத்தில் வைத்து விற்று, அவ்வப் போது தங்களுக்குப் பணத்தை அனுப்பி வைக்கிறேன்' என்று கேட்டுக் கொண்டார். . .

அப்படியே ஆசிரியர் அவரிடம் சில புத்தகங்களைக் கொடுத்து அனுப்பியதோடு கூட, பின்பும் ரெயில் பார்சல் மூலம் அவர் விருப் பப்படி பல புத்தகங்களே அனுப்பி வந்தார். *